கிரிக்கெட்: இங்கிலாந்து அணி மார்கன் உலக சாதனை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, June 18, 2019

கிரிக்கெட்: இங்கிலாந்து அணி மார்கன் உலக சாதனை

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி மார்கனின் சிக்ஸர் மழையால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 397 ரன்கள் குவித்துள்ளது

57 பந்துகளில் சதமடித்து விளையாடி வந்த மார்கன் தொடர்ந்து சிக்ஸர்களாக பறக்கவிட இங்கிலாந்து அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது

இதனிடையே, மார்கனுக்கு ஒத்துழைப்பு அளித்து விளையாடி வந்த ஜோ ரூட் 82 பந்துகளில் 88 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, அடுத்த பந்திலேயே மார்கன் மீண்டும் ஒரு சிக்ஸர் அடித்தார்.


 இது அவருடைய 17-வது சிக்ஸராகும். இதன்மூலம், ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையை மார்கன் படைத்தார். எனினும், இவர் சிக்ஸர் அடித்த அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார்.


இவர் 71 பந்துகளில் 4 பவுண்டரி, 17 சிக்ஸர்கள் உட்பட 148 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்

No comments:

Post a Comment