ஆசிரியர் போராட்டம்: முதல்வருக்கு அடுத்த தலைவலி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, June 17, 2019

ஆசிரியர் போராட்டம்: முதல்வருக்கு அடுத்த தலைவலி

டாக்டர்கள் போராட்டத்தை அடுத்து மேற்கு வங்கத்தில் ஆசிரியர்கள் போராட்டம் வெடித்துள்ளது.


இது அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அடுத்த தலைவலியாக மாறியுள்ளது. டாக்டர்கள் போராட்டம் : மேற்குவங்கத்தில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக டாக்டர்கள் பாதுகாப்பு கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 அவர்களுக்கு ஆதரவாக இன்று (ஜூன் 17)ல், நாடு முழுவதும் டாக்டர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீவிரம் :

 கோல்கட்டா மருத்துவமனை ஒன்றுக்கு போராடும் மருத்துவர்களை சந்திக்க சென்ற மம்தா, அவர்களது கோரிக்கைகளை கேட்காமல், பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல், 4 மணி நேர கெடு விதித்து எச்சரித்திருந்தார். இது போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியது.

ஆசிரியர்களும் போராட்டம் :

 இந்த நிலையில், சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்கு வங்கத்தில் ஆசிரியர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

 கோல்கட்டாவின் விகாஸ் பவன் முன்பாக ஊர்வலம் நடத்திய ஆசிரியர்களுக்கும், போலீசாருக்கம் இடையில் மோதல் வெடித்தது.

மம்தா அதிர்ச்சி :

தொடர்ந்து ஆசிரியர்கள் மாநிலத்தின் பல்வேறு நகரங்களிலும் போராட்டங்கள் நடத்த ஆயத்தமாகி வருவது குறிப்பிடத்தக்கது. இது மம்தாவின் நிர்வாகத்திற்கு மேலும் தலைவலியாக மாறியுள்ளது.

No comments:

Post a Comment