மழலைகளைக் கவரும் வகையில் அங்கன்வாடிகள்: புதிய கல்விக் கொள்கையில் பரிந்துரை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, June 26, 2019

மழலைகளைக் கவரும் வகையில் அங்கன்வாடிகள்: புதிய கல்விக் கொள்கையில் பரிந்துரை

குழந்தைகளைக் கவரும் வகையில், அங்கன்வாடிகள் மற்றும் தொடக்கப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்;


 இதற்காக, குழந்தைகளுக்கான கல்வி நிபுணர்கள், ஓவியக் கலைஞர்கள், கட்டுமான நிபுணர்கள் ஆகியோரை உள்ளடக்கிய குழுக்களை ஒவ்வொரு மாநிலத்திலும் ஏற்படுத்த வேண்டும் என்று புதிய கல்விக் கொள்கை வரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன் தலைமையிலான மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகக் குழு அளித்துள்ள இப்பரிந்துரையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:


அங்கன்வாடிகள், மழலையர் பள்ளிகள், தொடக்கப்பள்ளிகள் ஆகியவை, குழந்தைகளைக் கவர்ந்திழுக்கும் இடங்களாக மாற வேண்டும். அங்கன்வாடிகள், தொடக்கப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை, குழந்தைகளுக்கு பிடித்தமான வகையில் மேம்படுத்த வேண்டும்.

குழந்தைகள் கல்வி கற்பது மட்டுமன்றி மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் இடங்களாகவும் அவை அமைய வேண்டும்.


 சுகாதாரமான கழிப்பறை, சுத்தமான குடிநீர் வசதி, தூய்மையான சுற்றுச்சூழல், சிறப்பான இருக்கைகள் என உயர் தரமான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். குழந்தைகள் கல்வி பயில்வதற்கான உபகரணங்களும் அவர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கும் வகையில் இருக்க வேண்டும்.


 இத்தகைய வசதிகளுடன் அங்கன்வாடிகள், தொடக்கப் பள்ளிகளை மாற்றுவதற்கு, குழந்தைகளுக்கான கல்வி நிபுணர்கள், ஓவியக் கலைஞர்கள், கட்டுமான நிபுணர்கள் ஆகியோரை உள்ளடக்கிய குழுக்களை ஒவ்வொரு மாநிலத்திலும் ஏற்படுத்த வேண்டும் என்று பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment