எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள்: தரவரிசைப் பட்டியல் தாமதமாக வாய்ப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, June 29, 2019

எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள்: தரவரிசைப் பட்டியல் தாமதமாக வாய்ப்பு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.



விண்ணப்பங்களை பரிசீலித்து மாணவர்களை தரவரிசைப்படுத்தும் பணிகள் இன்னும் நிறைவடையாததே அதற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த 7-ஆம் தேதி தொடங்கி 20-ஆம் தேதி நிறைவடைந்தது.



அதில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 34,368 விண்ணப்பங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 25,388 விண்ணப்பங்கள் என மொத்தம் 59,756 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.


 விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 2-ஆம் தேதி வெளியிடப்படுவதாக இருந்தது

ஆனால், அதற்கான பணிகள் இதுவரை நிறைவடையாததால் திட்டமிட்டபடி தரவரிசைப் பட்டியலை வெளியிட முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.



எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூலை 4-ஆம் தேதி தொடங்கி 12-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் தரவரிசைப் பட்டியல் தாமதமாவது கலந்தாய்வையும் பாதிக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது

No comments:

Post a Comment