மாறுதல் கலந்தாய்வில் திருத்தம் :ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, June 29, 2019

மாறுதல் கலந்தாய்வில் திருத்தம் :ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

தமிழகத்தில் பொது கலந்தாய்வு விதிகளில் ஆசிரியர்கள் நலன் கருதி சில திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.அச்சங்க பொதுச்செயலாளர் ரங்கராஜன் தெரிவித்துள்ளதாவது


:நடப்பாண்டிற்கு (2019 -20) நடக்கும் ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 8 முதல் நடக்கிறது. இதற்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர் மூன்று ஆண்டுகள் ஒரே பள்ளியில் பணியாற்றியிருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது


.இதுபோல் மனமொத்த (மியூச்சுவல்) மாறுதல் பெறவும் மூன்று ஆண்டுகள் ஒரே பள்ளியில் பணியாற்றியிருக்க வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 இதுபோன்ற உத்தரவுகளால் பெரும்பாலான ஆசிரியர்கள் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்படும்.


மேலும், தொகுப்பூதியத்தில் நியமனம் பெற்ற ஆசிரியர்களில் 1.6.2006க்கு முன் பணியில் சேர்ந்திருப்பின் அப்பணிக் காலத்தையும் கணக்கில் கொண்டு முன்னுரிமை நிர்ணயம் செய்ய வேண்டும்.


பணி நிரவலில் சீனியர் ஆசிரியர் பாதிக்காத வகையில், சம்மந்தப்பட்ட ஒன்றியத்தின் ஒட்டுமொத்த முன்னுரிமை பட்டியலில் மிகவும் ஜூனியர் ஆசிரியரை நிரவல் செய்யும் வகையில் கலந்தாய்வு விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும், என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment