இன்றைய செய்திகள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, June 21, 2019

இன்றைய செய்திகள்

தமிழகத்தில் 63 பெட்ரோல் பங்குகள் எரிபொருள் விற்பனை செய்ய தடை : மோசடியில் ஈடுபட்டதால் தொழிலாளர் துறை அதிரடி நடவடிக்கை

ராஜ ராஜ சோழன் குறித்து சர்ச்சை விதமாக பேசிய வழக்கில் இயக்குநர் பா.ரஞ்சித்தை கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டிக்க உயர்நீதிமன்ற கிளை மறுப்பு தெரிவித்துள்ளது

தமிழகத்தில் குடிநீர் பிரச்சனையை சமாளிக்க கூடுதலாக ரூ.200 கோடி ஒதுக்கி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்

2018-2021ம் ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணத்தை ஆன்லைனில் வெளியிட அரசுக்கு ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு 3 மாதம் அவகாசம் கூறியிருந்த நிலையில், ஒரு மாதம் அவகாசத்தை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கி உத்தரவிட்டுள்ளது

கோவையில் புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது அதன் நகலை எரித்ததால் பெரும் பரபரப்பு நிலவியது.

மழை வேண்டி மீனாட்சி அம்மன் கோயிலில் நாளை சிறப்பு வருண பூஜை நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்

காவிரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. விஜிலா சத்யானந்த் வலியுறுத்தி உள்ளார்

எம்.பி.பி.எஸ். படிப்பிற்கான விண்ணப்பத்தை கொடுப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது

தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

வீராணம் ஏரியில் நீர்மட்டம் குறைந்து வருவதால் 20 நாட்களுக்கு மட்டுமே சென்னைக்கு குடிநீர் அனுப்ப முடியும்: பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்

நெட் தேர்வு எழுத கோவையை சேர்ந்தவருக்கு காஷ்மீரில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.கோவையை சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவர் உதவி பேராசிரியருக்கான ‘நெட்’ தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், அவருக்கு ஜம்மு-காஷ்மீரில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருப்பது
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 200 மீட்டர் தூரம் வழிந்தோடி ஆற்றில் கலந்தது

காற்று மாசுக்கு படிப்படியாக ‘குட்-பை’ சொல்லும் வகையில், அரசு போக்குவரத்துக் கழகத்தில் மதுரைக்கு 100, திண்டுக்கல்லுக்கு 50 மின்சார பேட்டரி பஸ்கள் தயாராகி விரைவில் இயக்கப்பட உள்ளது.

சிவகங்கை அருகே பில்லூரில் பதினெட்டாம் நூற்றாண்டை சேர்ந்த வீரனின் நடுகல் சிலை கண்டெடுக்கப்பட்டது

ஆயில் நிறுவனங்களை கண்டித்து டேங்கர் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக் செய்ய முடிவு

பருவகாலங்களில்தான் பெய்யும் பிரதமரோ, முதல்வரோ நினைத்தால் மழையை பொழிய வைக்க முடியாது: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக  நீதிபதி அருணா ஜெகதீசனிடம் முகிலன்  மீட்பு கூட்டியக்கத்தினர் ஆதாரங்கள் அடங்கிய சிடியை வழங்கினர்.

நாகர்கோவில்-கன்னியாகுமரி இடையே நடக்கும் இரட்டை ரயில்பாதை பணிக்கான வேலைகள் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது

ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்தில் கடும் வெயில் காரணமாக நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகிறது. இதனால் திண்டுக்கல் மற்றும் சுற்றுப்பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் அமைந்துள்ள சாலையில் பயணிக்க அனைத்து வகை வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

திருச்சி இலங்கை அகதிகள் முகாமில் உள்ள 65 பேரும் இந்திய குடியுரிமைக்கோரி விண்ணப்பிக்கலாம் என்று உயர்நீதிமன்ற கிளை நீதிபதி கூறியுள்ளார்.

கஜா புயலால் ஓட்டு வீடுகளை முழுமையாக இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக கொள்கை முடிவு எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான ஓய்வு பெற்ற செவிலியர் அமுதா உள்ளிட்ட 11 பேருக்கு காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூலை 4ம் தேதி வரை காவலை நீட்டித்து நாமக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஜய் நடிக்கும் 63-வது படத்தின் தலைப்பு பிகில் என பெயரிடப்பட்டுள்ளது

20 வாரங்களுக்கு குறைவான கருவை கலைக்க மருத்துவ குழுவையோ, நீதிமன்றத்தையோ நாட அவசியமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது

தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில் 8 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க, மாநில அரசிடமிருந்து பரிந்துரைகள் வந்துள்ளது என்று சுகாதாரத்துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் தகவல் அளித்துள்ளார்

தமிழகத்தில் குடிநீர் பிரச்சனையை சமாளிக்க கூடுதலாக ரூ.200 கோடி நிதியை ஒதுக்கி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று அறிக்கை தர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தமிழகத்தில் இதுவரை நிலவி வந்த வெப்பநிலை படிப்படியாக குறையும் : வானிலை ஆய்வு மையம்

2020 மார்ச் முதல் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். பழைய பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், இனி புதிய பாடத்திட்டத்தின் கீழ், தேர்வெழுத வேண்டும் என்றும் தேர்வுத்துறை இயக்குனர் கூறியுள்ளார்

தமிழக சட்டப்பேரவையின் அலுவல் ஆய்வு கூட்டம் வரும் 24-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

தென்மேற்கு பருவமழை நகர்ந்துள்ள நிலையில் படிப்படியாக தமிழகத்தில் வெப்பம் குறையும் :சென்னை வானிலை மையம்

ரூ .5.52 கோடி கடன் பாக்கிக்காக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வீடு ஏலத்துக்கு வருவதாக அறிவிப்பு

ராட்டினம் அறுந்து விழுந்த விபத்தையடுத்து சென்னை குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவை மூட காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

மூளைக் காய்ச்சல் போன்ற நோய்கள் தமிழகத்தில் தாக்க வாய்ப்புகள் குறைவு : அமைச்சர் விஜயபாஸ்கர்

எழும்பூரில் போலீசாருக்கான ரத்ததான முகாமை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

நடிகர் ரஜினிகாந்த் 2021ல் முதல்வராக வேண்டி சிதம்பரம் நடராஜர் கோயிலில் அவரது அண்ணன் சிறப்பு யாகம் நடத்தினார்

பள்ளிகளில் வாரத்தில் ஒரு நாள் யோகா பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்

தமிழகத்திற்கு வரவேண்டிய நிதியை கேட்டு ஜிஎஸ்டி கூட்டத்தில் அழுத்தம் கொடுக்கப்படும் : அமைச்சர் ஜெயக்குமார்

நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட 3 மாணவிகளின் குடும்பத்திற்கு என்ன நிவாரணம் தரப்பட்டுள்ளது என்றும், நீட் தேர்வு தற்கொலையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்றும் தெரிவிக்குமாறு  தமிழக  அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

திருப்பூர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைகள்,  திருவண்ணாமலை, புதுக்கோட்டை மற்றும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்  கல்லூரி மருத்துவமனைகளுக்கு ரூ.30 கோடி செலவில் புதிய எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவிகள் விரைவில்  வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

வடபழனி, தாம்பரம் வழியாக ஆறு ஆண்டுகள்  கழித்து அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது

ஜப்பானில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது

கடும் அமளிகளுக்கு இடையே மக்களவையில் முத்தலாக் தடை மசோதாவை சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார்.

கஜா புயலால் பாதித்த குடிசை வீடுகளுக்கு ரூ.6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க கோரிக்கை வைத்தோம் : ஓ பன்னீர் செல்வம்

தமிழகத்தில் வறட்சியை சமாளிக்க ரூ.1000 கோடி வழங்க வேண்டும் : நிதியமைச்சர்கள் கூட்டத்தில் ஓ.பி.எஸ். வலியுறுத்தல்

நாடு முழுவதும் கூடுதலாக சித்த மருத்துவமனைகளை திறக்க வேண்டும் : மக்களவையில் பாரிவேந்தர் பேச்சு

மகாராஷ்டிராவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மராத்தி மொழியை காட்டாயமாக பயிற்றுவிக்க வேண்டும்: முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய அமைச்சர் ஹர்சவர்தன் கோரிக்கை

No comments:

Post a Comment