நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா?'' என்ற வாசகத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பு பலகைகளை ராமநாதபுரம் போலீஸார் மாவட்டம் முழுவதும் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.
மாவட்டத்தில் உள்ள முக்கிய நகர்ப் பகுதிகளில் ``டக்..! டக்..! டக்..! நீங்கள் பாதுகாப்புடன் இருக்கிறீர்களா?" என்ற கேள்வியுடன் கூடிய முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அறிவிப்பு பலகைகளை நிறுவியுள்ளனர். அதில், வீட்டில் பாதுகாப்பாக இருக்க வீட்டில் பொருத்தப்பட்டுள்ள ஜன்னல், கிரில் மற்றும் கதவு வலுவானதாக இருக்கும்படி ஏற்படுத்த வேண்டும். வீட்டில் உள்ள விலை மதிப்புமிக்க பொருள்களை வங்கிப் பெட்டகத்தில் வைத்துப் பாதுகாக்கவும். உங்கள் வீட்டிற்கு வருவோரை உள்ளிருந்தே கண்டறியும் வகையில் கதவின் நிலைப்பகுதியில் துளை அமைத்திருப்பதுடன், கதவிற்கும் நிலைக்கும் இடையே சங்கிலி பொருத்தி உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்களை எக்காரணம் கொண்டும் வீட்டிற்குள் அனுமதிப்பதைத் தவிர்க்க வேண்டும். வீட்டின் தேவையான இடங்களில் சி.சி.டி.வி. கேமரா மற்றும் பாதுகாப்பு எச்சரிக்கை மணி ஆகியவை பொருத்தி பாதுகாப்பினை பலப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் உங்கள் வீட்டின் சுற்றுப்புறம் பாதுகாப்பு வளையத்தின் கீழ் இருக்கும் வகையில் விளக்கு அமைத்துக்கொள்ள வேண்டும்'' என 6 விதமான பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்களை எழுதியுள்ளனர்.
ஏற்கெனவே `ஹலோ போலீஸ்' என்ற திட்டத்தை அறிமுகம் செய்து மாவட்டத்தில் குற்றச்சம்பவங்கள் குறித்த புகார்களை அளிக்கும் வசதியை ஏற்படுத்திய ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையினரின் தற்போதைய நடவடிக்கை பொது மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளதுடன் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment