கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம் அரசு பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு ஆசிரியர்கள் முத்துராஜ், முருகேசன் மற்றும் வேலப்பன் ஆகியோர் தான் காரணம் எனக்கூறி 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில், ஆசிரியர்கள் 3 பேரையும் நாகர்கோவில் தலைமை குற்றவியல் நீதிமன்றம் கடந்த 2005ல் விடுவித்தது.
இதை எதிர்த்து, கன்னியாகுமரி சரக இன்ஸ்பெக்டர் தரப்பில், ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்யப்பட்டது.
இந்த அப்பீல் மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் பிறப்பித்த உத்தரவு:
தவறான எண்ணம் உள்ள மாணவர்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பும், கடமையும் ஆசிரியர்களுக்கு உண்டு. இதற்கான ஆசிரியர்களின் நடவடிக்ைக சில நேரங்களில் கடுமையானதாகிறது
இதனால் சில மாணவர்கள் மனம் உடைந்து தற்கொலை எண்ணத்திற்கு ஆளாகின்றனர்.
இதற்கு சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை பொறுப்பாக்க கூடாது. எனவே, இந்த அப்பீல் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
தலைமை குற்றவியல் நீதிமன்றத்தின் உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. 17 வயதில் பிளஸ் 2க்கும், 19 வயதில் கல்லூரி படிப்பையும் மாணவர்கள் சிறப்பாக எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக அழுத்தம் கொடுக்கும் வகையில் தற்போதைய கல்வி முறை உள்ளது.
தேர்வில் குறைவான மதிப்பெண் பெறும்போது, அதை அவர்களால் தைரியமாக எதிர்கொள்ள முடியவில்லை.
17 முதல் 19 வயது வரையிலான பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு படிப்பால் ஏற்படும் மன அழுத்தத்தை அறிவியல் ரீதியாக குறைக்க வேண்டியது அவசியம். இதற்காக மதிப்பீடு செய்யும் சிறப்பு திட்டத்தை தமிழக அரசு உருவாக்க வேண்டும்.
மாணவர்களுக்கு தற்கொலை எண்ணம் ஏற்படுவதை தடுக்க மனநல ஆலோசகர்கள் மூலம் உளவியல் ரீதியாக கவுன்சலிங் வழங்க வேண்டும்.
மாணவர்களின் நன்னடத்தையை வளர்க்கத் தேவையான வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்

No comments:
Post a Comment