ஆசிரியர் இடமாற்றத்தை கண்டித்து வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, June 25, 2019

ஆசிரியர் இடமாற்றத்தை கண்டித்து வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்

அரசு பள்ளி ஆங்கில ஆசிரியரை இடமாற்றம் செய்ததை கண்டித்து, வகுப்புகளை புறக்கணித்து மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் கும்மிடிப்பூண்டி பகுதியில் பரபரப்ப ஏற்படுத்தியது.கும்மிடிப்பூண்டி அடுத்த நத்தம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி உள்ளது


. 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் மங்காவரம், அப்பாவரம், பெரியநத்தம், சின்னநத்தம், ராஜாபாளையம் ஆகிய கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.


இந்த பள்ளியில் கடந்த 2 ஆண்டாக ஆங்கில ஆசிரியராக பாபு (36) என்பவர் பணியாற்றி வந்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு இவர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் வட்டார கல்வி அலுவலரிடம் சென்று, ''ஆசிரியர் பாபுவை வேறு இடத்துக்கு மாற்றக்கூடாது.


அவரால் தான் எங்களுக்கு ஆங்கிலம் நன்றாக தெரிகிறது'' என புகார் செய்தனர். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் நேற்று காலை பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி எதிரே அமர்ந்து திடீரென கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


இதில், மாணவர்களின் பெற்ேறாரும் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் ஆங்கில ஆசிரியர் பாபுவை வேறு இடத்துக்கு மாற்றக்கூடாது என கோஷம் எழுப்பினர்


.தகவலறிந்து ஆரம்பாக்கம் போலீசார் மற்றும் பொன்னேரி வட்டார கல்வி அலுவலர் ரவி மற்றும் கல்வி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆசிரியர் பாபு இதே பள்ளியில் பணி அமர்த்தப்படுவார் என உறுதிமொழி தந்தனர்

No comments:

Post a Comment