கல்லூரி படிப்பை தொடர முடியாமல் இருந்த மாணவிக்கு நேரில் சென்று நிதியுதவி செய்த மாவட்ட ஆட்சியர் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, June 28, 2019

கல்லூரி படிப்பை தொடர முடியாமல் இருந்த மாணவிக்கு நேரில் சென்று நிதியுதவி செய்த மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கல்லூரி படிப்பை தொடர முடியாமல் மாணவி தவித்து வந்த நிலையில் அவரது பூக்கடைக்கே சென்று மாவட்ட ஆட்சியர் நிதியுதவி வழங்கிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மேலப்பாளையத்தை சேர்ந்த இலக்கியவாணி அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் படித்து வந்தார்.


 மேலும் இவரது தந்தை உதயகுமார். இவர் செங்கம் புதிய பேருந்து நிலையம் எதிரே பூக்கடை நடத்தி வருகின்றார். இதை தொடர்ந்து வறுமையான சூழ்நிலையிலும் தனது மகளை மூன்று ஆண்டுகள் படிக்க வைத்தார் உதயகுமார்.


எனினும் தற்போதைய இறுதி ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை அவரால் செலுத்த இயலவில்லை.

இதனால் வேதனை அடைந்த இலக்கியவாணி தமது தந்தைக்கு உதவியாக பூக்கடையில் வேலை செய்து வந்தார்.


 இருப்பினும் தமது நிலை குறித்து மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பினார்.

இதையடுத்து அதன் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை மனுவும் அளித்திருந்தார்.


 மேலும் இந்நிலையில் உதயகுமாரின் பூக்கடைக்கு நேரில் சென்று வந்த ஆட்சியர் கந்தசாமி இலக்கியவாணியுடன் சேர்ந்து பூக்கட்டியபடியே அவரது நிலையை கேட்டறிந்தார். பின்னர் 40 ஆயிரம் ரூபாய் உதவி தொகையை வழங்கினார்.


 மேலும் எவ்வளவு கஷ்டம் அல்லது இடர்பாடுகள் வந்தாலும் படிப்பை பாதியில் நிறுத்தக்கூடாது எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். மேலும் இதை தொடர்ந்து உதவித்தொகை வழங்கிய ஆட்சியருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment