மாத சம்பளம் வாங்குவோர் கவனத்திற்கு.. - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, June 6, 2019

மாத சம்பளம் வாங்குவோர் கவனத்திற்கு..

வருமான வரி என்பது மக்கள் நேரடியாக அரசாங்கத்திற்கு அளிக்கும் வரியாகும். ஒவ்வொருவருக்குமான வருமான வரி அவர்களுக்கு கிடைக்கும் வருமானத்தைப் பொறுத்து மாறும். வருமான வரி தாக்கல் செய்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். நீங்கள் வருமான வரியை கட்டியிருக்கின்றீர்கள் என்பதற்கான சான்று அது தான்.

மாத சம்பளம் வாங்குவோர் ஆண்டுதோறும் ஜூலை 31ம் தேதிக்குள் அபராதம் இன்றி வருமான வரி கணக்கை தாக்கல் செய்யலாம். அந்த வகையில் 2018-19 ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்ய தேவைப்படும் முக்கிய படிவம் 16 (Form 16) வழங்குவதற்கான கெடு தேதியை வரும் 15ம் தேதியில் இருந்து அடுத்த மாதம் 10ம் தேதியாக வருமான வரித்துறை நீட்டித்துள்ளது

நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு படிவம் 16 வழங்குவதற்கான கெடு தேதியை ஜூலை 10ம் தேதி வரை வருமான வரித்துறை நீட்டிப்பு செய்துள்ள தகவலை வருமான வரித்துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.



இதுபோல் நிறுவனங்கள் டிடிஎஸ் விவரங்களை படிவம் 24 கியூ-வில் கடந்த மாதம் 31ம் தேதிக்குள் சமர்ப்பித்திருக்க வேண்டும். இந்த கெடு தேதியும் வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 24 கியூ படிவத்தில் மே இறுதியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இதில் கூடுதல் விவரங்கள் கோரப்பட்டது இதை கருத்தில் கொண்டு கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

படிவம் 16 என்றால் என்ன?

இந்த ஃபார்மினை டேக்ஸ் டிடெக்டட் அட் சோர்ஸ் (Tax Deducted at Source) என்பர். இது ஒரு ஊழியருக்கு, அவரின் நிறுவனம் அளிக்கும் சான்றிதழாகும். இந்த ஆவணத்தில் வேலை செய்பவருக்கு அளிக்கப்படும் மாதச் சம்பளம் மற்றும் TDS ஆகியவை பற்றிய விளக்கமான தகவல்கள் இருக்கும். இந்த ஃபார்மில் நிறுவனத்தின் PAN மற்றும் TAN எண் இடம் பெற்றிருக்கும்.

No comments:

Post a Comment