காலை வழிபாடு மற்றும் தினசரி செயல்பாடுகள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, June 23, 2019

காலை வழிபாடு மற்றும் தினசரி செயல்பாடுகள்

🕴🕴🕴🕴🕴🕴🕴
*காலை வழிபாடு மற்றும் தினசரி செயல்பாடுகள்*
2⃣4⃣-0⃣6⃣-1⃣9⃣

*இன்றைய திருக்குறள்*

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
 நீர்மை யுடையார் சொலின்.

*விளக்கம்*:
இனிய குணத்தவர் பயனற்ற சொற்களைச் சொன்னால், அவர் பெருமையும், புகழும் அப்பொழுதே நீங்கிவிடும்.

✡✡✡✡✡✡✡

*பொன்மொழி*

கனவு காணுங்கள், கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல உன்னைத் தூங்க விடாமல் செய்வது எதுவோ அதுவே கனவு.
       - அப்துல் கலாம்

⚜⚜⚜⚜⚜⚜⚜

*Important Daily Used Words*

 Peon சேவகர்

 Petition Writer விண்ணப்பம் எழுதுபவர்

 Philosopher தத்துவஞானி

 Photographer புகைப்படக் கலைஞர்

 Physician மருத்துவர்

🌿🍀☘🎋🌿🍀☘

*இன்றைய மூலிகை*

*வல்லாரை*

நல்ல டானிக், எல்லா நோய்களையும் நீக்கும். மஞ்சள் காமாலை, அல்சர், தொழுநோய், யானைக்கால் வியாதி, பேதி, நரம்புத்தளர்ச்சி, ஞாபக சக்தி முதலியவற்றிற்கு சிறந்தது. ஒரு நேரத்திற்கு பத்து இலைகள் போதும்.

✍✍✍✍✍✍✍

*பொது அறிவு*

1. பஞ்சாபின் நாட்டிய நாடகம் எது ?

*பாங்கரா*

2.இரும்புக்குதிரை என்ற நூலை எழுதியவர் யார் ?

*பாலக்குமாரன்*


3.இண்டிகா என்ற நூலை எழுதியவர் யார் ?

*மெகஸ்தனிஸ்*

4. திருப்புகழைப் பாடியவர் யார் ?

*அருணகிரிநாதர்*

✒✒✒✒✒✒✒

*நூலாசிரியர் - நூல்கள்*

மதுரைக்காஞ்சி –    மாங்குடி மருதனார்

குறிஞ்சிப் பாட்டு –    கபிலர்

இன்னா நாற்பது –    கபிலர்

பதிற்றுப்பத்து ஏழாம் பத்து –    கபிலர்

மலைபடுகடாம் அல்லது கூத்தாற்றுப்படை –    பெருங்கௌசிகனார்

குறுந்தொகை –    தொகுத்தவர் புரிக்கோ

நற்றிணை –    தொகுத்தவர் பாண்டியன் மாறன் வழுதி

அகனுாறு –    தொகுத்தவர் உருத்திரசன்மர்

ஐங்குறு நுாறு –    தொகுத்தவர் கூடலுார் கிழார்

கலித்தொகை –    தொகுத்தவர் நல்லந்துவனார்

🧬🧬🧬🧬🧬🧬🧬

*Today's grammar*

Reflexive Pronouns – அனிச்சைச் செயல் சுட்டுப்பெயர்கள்
Reflexive Pronouns – அனிச்சைச் செயல் சுட்டுப்பெயர்கள் : ஒரு வாக்கியத்தின் எழுவாய் சொல்லை மீண்டும் அனிச்சையாக குறிப்பிடுவதற்கு பயன்படும் சுட்டுப்பெயர்கள்.

myself - நானாகவே

yourself - நீயாகவே

himself - அவனாகவே

herself - அவளாகவே

itself - அதுவாகவே

ourselves – நாங்களாகவே, நாமாகவே

yourselves - நீங்களாகவே

themselves – அவர்களாகவே, அவைகளாகவே

உதாரணம்:

I cut my hair myself.

📫📫📫📫📫📫📫

*அறிவோம் இலக்கணம்*

*சொல்*

ஒர் எழுத்து தனித்து நின்றோ , பல எழுத்துகள் சேர்ந்து வந்தோ பொருள் தருவது சொல் எனப்படும்.

சொல் 4 வகைப்படும்
பெயர்ச்சொல்
வினைச்சொல்
இடைச்சொல்
உரிச்சொல்

*பெயர்ச்சொல்*
பெயரை உணர்த்தும் சொல் பெயர்ச்சொல் ஆகும்.
.பொருள் , இடம் , காலம் , சினை (உறுப்பு), குணம் (பண்பு) , தொழில்என்ற ஆறில் எதாவது ஒன்றை உணர்த்தும் வகையில் இருக்கும் .
இந்த ஆறும் , பொருளாது ஆறு (அ) பொருள் முதலாறு என்றும் அழைப்பர் .

வகைகள் - எ.கா
*பொருட்பெயர்* மனிதன் , பசு , மயில் , புத்தகம்

*இடப்பெயர்*
சேலம் , ஈரோடு ,நாமக்கல்.

*காலப்பெயர்*
மணி, நாள் , மாதம் , வருடம்

*சினைப்பெயர்* கை ,கால் , மூக்கு , கண்

*பண்புபெயர் *
நீளம் , இனிமை ,வெண்மை, வட்டம்
*தொழிற்பெயர்* படித்தல் , எழுதல் , உண்ணல்.

🗣🗣🗣🗣🗣🗣🗣

*இன்றைய கதை*

*முயற்சி செய்வோம்*

 ராஜாவும் மணியும் நண்பர்கள். அவர்கள் இருவருக்கும் தாய் தந்தையர் மற்றும் சுற்றார் கிடையாது. ராஜாவுக்குக் கண் தெரியாது. அதேபோல் மணியால் நடக்க முடியாது. அவர்கள் வாழ்ந்த கிராமத்தில் கிடைத்த வேலையைச் செய்து கிராமத்தில் உள்ளோர் கொடுப்பதைச் சாப்பிட்டு வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் அவர்களுக்குப் பக்கத்து ஊரில் நடக்கும் திருவிழா பற்றித் தெரிய வந்தது. இருவருக்கும் அங்கே போக மிகுந்த ஆசை. அந்த ஊருக்குச் செல்ல மிகுந்த தொலைவு நடக்க வேண்டும். என்னாலோ நடக்க முடியாது உன்னாலோ பார்க்க முடியாது. நமக்கு ஏன் இந்த ஆசை? என்று மணி வருத்ததுடன் சொன்னான்.

 ராஜா சிறிது நேரம் தீவிரமாக யோசித்தான். பின் நண்பா! உன்னால் நடக்கத்தான் முடியாது. ஆனால் கூர்மையாகப் பார்க்க முடியும். என்னால் பார்க்கத்தான் முடியாது. ஆனால் வெகுதூரம் நடக்க முடியும். நீ என் தோள் மேல் ஏறிக்கொள். எனக்கு வழியைச் சொல்லிக்கொண்டே வா. நாம் இருவரும் திருவிழாவிற்குச் சென்று வரலாம் என்றான் ராஜா. இருவரும் மகிழ்ச்சியாக திருவிழாவிற்குச் சென்று வந்தார்கள்.

*நீதி*:
முயன்றால் முடியாதது எதுவுமில்லை.
🧾🧾🧾🧾🧾🧾🧾

*செய்திச் சுருக்கம்*

✳ இந்தியாவில் இந்த ஆண்டு 39 சதவிகிதம் மழை குறைவு என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.

✳ முதுகலை ஆசிரியர் கணினி தேர்வை முழுமையாக முடிக்காத ஆசிரியர்களுக்கு மறு தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.

✳ உத்தரப்பிரதேச மாநிலத்தில்  "அப்பிளாஸ்டிக் அனீமியா" என்ற நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பிரதமர் ரூ 30 லட்சம் மருத்துவ உதவி.

✳ பிளாஸ்டிக் பால் கவர்களை பணம் கொடுத்து திரும்பப்பெற முடிவு, ஆவின் நிறுவனம் அறிவிப்பு.

✳ காஷ்மீரில் 200 அடி பள்ளத்தில் மினி பஸ் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழப்பு.


☘🍀🌿🎋☘🍀🌿

*தொகுப்பு*

T.THENNARASU,
S.G.TEACHER,
TN DIGITAL TEAM,
R.K.PET BLOCK,
THIRUVALLUR DT.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

No comments:

Post a Comment