லைசென்ஸ் பெறும் கல்வித் தகுதி ரத்து - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, June 18, 2019

லைசென்ஸ் பெறும் கல்வித் தகுதி ரத்து

போக்குவரத்து வாகனங்களை இயக்குவதற்கான, 'லைசென்ஸ்' பெறுவதற்கு உள்ள குறைந்தபட்ச கல்வித் தகுதியை நீக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, போக்குவரத்து வாகனங்களை இயக்குவதற்கான லைசென்ஸ் பெறுவதற்கு, குறைந்தபட்சம், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.கிராமப் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில், இந்த குறைந்தபட்ச கல்வித் தகுதியை நீக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கிராமப் பகுதிகளில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில், போக்குவரத்து வாகனங்களை இயக்குவதற்கான லைசென்ஸ் பெறுவதற்கு உள்ள குறைந்தபட்ச கல்வித் தகுதி நீக்கப்படுகிறது.

இதன் மூலம், கிராமப் பகுதிகளில் உள்ள, படிக்காத, அதே நேரத்தில், திறன் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

அதையடுத்து, இந்த குறைந்தபட்ச கல்வித் தகுதியை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 இதற்கான சட்டத் திருத்தம் செய்யப்பட்டு, விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.அதே நேரத்தில், வாகனத்தை இயக்குவதற்கான திறன் இருக்க வேண்டும். போக்குவரத்து விதிகள் தொடர்பாக அறிந்திருக்க வேண்டும்.

அதற்காக நடத்தப்படும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். போக்குவரத்து பயிற்சிப் பள்ளிகளில் முறையாக பயிற்சி பெற வேண்டும் போன்றவற்றில் எந்த மாற்றமும் இல்லை.இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment