உபரி ஆசிரியர் பணிநிரவல் கலந்தாய்வுக்கு பட்டியல் தயாரிக்க வேண்டும்: தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, June 22, 2019

உபரி ஆசிரியர் பணிநிரவல் கலந்தாய்வுக்கு பட்டியல் தயாரிக்க வேண்டும்: தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவு

உபரி ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வுக்கு பட்டியல் தயாரிக்குமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

 இதுதொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குனர், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:

நடுநிலைப்பள்ளி வளாகங்களில் ஆரம்பிக்கப்பட்ட எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு பாடம் நடத்துவதற்கு பணி நிரவல் மூலம் உபரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டார்கள். உபரி ஆசிரியர்கள் பணி நிரவல் கலந்தாய்வு EMIS இணையதளம் மூலம் நடைபெற உள்ளது.


அரசு உதவிபெறும் பள்ளிகளில் இருந்து நடுநிலைப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நடத்துவதற்காக ஆசிரியர்கள் மாற்றப்பட்டிருந்தால், அந்த பள்ளிகளுக்கு கூடுதலாக தலா ஒரு பணியிடம் வழங்க வேண்டும்.

அவ்வாறு அனைத்து பள்ளிகளுக்கும் குறிப்பிட்ட பின், ஒட்டுமொத்த மாவட்டத்தின் காலி பணியிடம் மற்றும் தேவை சேர்த்து, மாவட்டத்திலுள்ள உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கு சமமாகவோ, கூடுதலாகவோ இருந்தாலோ வேறு எந்த பள்ளிக்கும் needed கலம் பூர்த்தி செய்யக்கூடாது.

 needed கலம் பூர்த்தி செய்வதை முதன்மை கல்வி அலுவலர்கள் தங்கள் கண்காணிப்பில் மேற்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment