மேக்அப் பொருட்கள் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, June 18, 2019

மேக்அப் பொருட்கள் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை!

நீங்கள் வாங்கும் மேக்அப் பொருட்கள் விலை குறைவாக இருக்கிறதே என்பதற்காக வாங்குவது சரியன்று. அதேசமயம் நீங்கள் அதிக விலை கொடுத்து வாங்கும் பிரபலமான பிராண்டுகளாக இருந்தாலும், பின் பக்கம் என்ன எழுதியிருக்கிறது என்பதைப் படிப்பது அவசியம். குறிப்பாக இந்த மூலக்கூறுகள் அவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ளனவா என்பதை தெரிந்துகொள்வது அவசியம் என டெர்மடாலஜிஸ்ட் சிரஞ்சீவ் சப்ரா மற்றும் பங்கச் சத்ருவேதி ஆகியோர் குறிப்பிடுகிறார்கள். அவை என்னென்ன என்பதைப் பார்க்கலாம்.

ஆண்டி ஆக்ஸிடண்ட் :

நாம் பயன்படுத்தும் எந்த ஸ்கின் கேர் பொருட்களாக இருந்தாலும், அதில் ஆண்டி ஆக்ஸிடண்ட் இருக்க வேண்டியது அவசியம். இது சருமத்தை சிதையவிடாமால் பாதுகாக்கும். சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ளும்.

பாராபென் ஃபிரீ :

பாராபென் (Paraben) சருமத்தில் கொலாஜின்(Collagen) அடுக்கு (தோல் அடுக்கு) உற்பத்தியை குறைக்கக் கூடியது. இது பொதுவாக எல்லா காஸ்மெடிக்ஸ் பொருட்களிலும் இல்லை என்றேக் குறிப்பிடப்பட்டிருக்கும். பாராபென் இல்லா காஸ்மெடிக்ஸை பயன்படுத்தினால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.

சல்ஃபேட் ஃபிரீ :

சல்ஃபேட், சருமத்தில் இயற்கையாக வடியக் கூடிய எண்ணெய்யைக் குறைக்கக் கூடியது. இது சருமத்தை வறட்சியாக்கி அரிப்பை உண்டாக்கும். முகத்திற்கு மட்டுமல்ல தலைக்கு பயன்படுத்தும் பொருட்களிலும் சல்ஃபேட் இல்லா பொருட்களை வாங்குவது நல்லது.

வைட்டமின் C :

சருமத்திற்கு மிக முக்கியத் தேவை வைட்டமின் C. சூரிய கதிர்களால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுத்து, சருமத்தில் ஒரு லேயர் போல பாதுகாப்பதே இந்த வைட்டமின் C தான். சருமத்தில் பருக்கள் வருவதைத் தடுப்பதும் இதுவே.

No comments:

Post a Comment