தபால் நிலைய சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம்:மத்திய நிதியமைச்சகம் புதிய உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, June 29, 2019

தபால் நிலைய சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம்:மத்திய நிதியமைச்சகம் புதிய உத்தரவு

தபால் நிலையங்களில் சேமிக்கப்படும் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை சிறிய அளவில் குறைத்து மத்திய நிதியமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இது தொடர்பாக நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


 அதன்படி இரண்டாவது காலாண்டில் இருந்து அதாவது ஜூலை 1-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரையில், ஓர் ஆண்டு முதல் மூன்றாண்டு வரையிலான சிறுசேமிப்பு வைப்புத் தொகைக்கான வட்டி 7.0 சதவீதத்தில் இருந்து, 6.9 ஆக குறைக்கப்பட்டுள்ளது

இதே போல் ஐந்தாண்டு திட்டத்துக்கான வட்டி 7.8 சதவீதத்தில் இருந்து 7.7 ஆகவும், மூத்த குடிமக்களுக்கான ஐந்து ஆண்டு கால சேமிப்பு திட்டத்துக்கான வட்டி 8.0 சதவீதத்தில் இருந்து 7.9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

செல்வ மகள் சேமிப்பு திட்ட வட்டி, 8.5 சதவீதத்தில் இருந்து 8.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.


 112 மாதங்களில் முதிர்ச்சி அடையும் கிஸான் விகாஸ் பத்திரத்துக்கான காலம் ஒரு மாதம் அதிகரிக்கப்பட்டு, வட்டியும் 7.6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment