டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்வானவர்கள் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, June 18, 2019

டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்வானவர்கள் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கீழ்காணும் பதவிகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன.


தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் தேர்வுக்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


 அதன்படி, 2017 -18ம் ஆண்டுக்கான தமிழ்நாடு சிறைத்துறை சார்நிலைப் பணியில் அடங்கிய  உதவி சிறை அலுவலர் பதவிக்கு காலியாக உள்ள 30 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஜனவரி 6ம்தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 8305 பேர் எழுதினர்.


இதில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கும், நேர்காணல் தேர்விற்கும் தற்காலிகமாக 80 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வரும் 25ம்தேதி நேர்காணல் தேர்வு நடைபெறுகிறது.

 அதேபோன்று, 2017-19ம் ஆண்டுக்கான  தமிழ்நாடு இந்து சமய அறநிலைய     சார் நிலை  பணிகளில் அடங்கிய தொகுதி- 7 பணி, செயல் அலுவலர், நிலை-3 பதவிகளுக்கு காலியாக உள்ள 105 பணியிடங்களுக்கான தேர்வு கடந்த பிப்ரவரி 16ம்தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வை 46,316 பேர் எழுதினர். இதில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு 108 பேர் தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


 மேலும், 2018-19ம் ஆண்டுக்கான தமிழ்நாடு  நிலவியல் மற்றும் சுரங்க துறைக்கான  உதவி நிலவியலாளர் பதவி மற்றும்  2012-19ம் ஆண்டுக்கான  தமிழ்நாடு பொறியியல் சார் நிலை பணிக்கு பொதுத்துறைக்கான புவியியலாளர் பதவிகளுக்கு காலியாக உள்ள 15 பணியிடங்களுக்கான தேர்வு கடந்த மே 5ம்தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வை 516 பேர் எழுதினர்.


இதில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு 39 பேர் தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment