ஆதார் கார்டு சேவை மையம் அமைக்க உரிமம் பெறுவது எப்படி? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, June 5, 2019

ஆதார் கார்டு சேவை மையம் அமைக்க உரிமம் பெறுவது எப்படி?

ஆதார் கார்டு சேவை மையம் அமைக்க உரிமம் பெறுவது எப்படி?


ஆதார் கார்டு இல்லாதவர்கள் விவரங்களை பதிவேற்றி, புதிய கார்டு பெற்றுத்தந்து, வருவாய் ஈட்ட முடியும் என்று கூறப்படுகிறது.
   
தேசிய தனிநபர் அடையாள ஆணையமான UIDAI ஆதார் கார்டு சேவை மையம் அமைக்க தனியார்களுக்கு உரிமை வழங்குகிறது.

இந்த உரிமையை பெறுவதன் மூலம் ஆதார் கார்டு இல்லாதவர்கள் விவரங்களை பதிவேற்றி, புதிய கார்டு பெற்றுத்தந்து, வருவாய் ஈட்ட முடியும் என்று கூறப்படுகிறது.


எனவே ஆதார் கார்டு மையம் அமைக்க உரிமம் பெறுவது எப்படி என்று இங்கு பார்ப்போம்:

1) முதலில் தேசிய தனிநபர் அடையாள ஆணையத்தில் சூப்பர்வைசர் அல்லது ஆப்ரேட்டருக்கான சான்றிதழ் பெற வேண்டும்.

2) இதற்கு https://uidai.gov.in/aadhaar-eco-system/training-testing-certification-ecosystem.html என்ற இணைப்பிற்கு சென்று தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வு எழுத வேண்டும்.


3) அந்தத் தேர்வில் வெற்றிபெற்ற பிறகு ஆதார் பதிவு மற்றும் ஆதார் பயோமெட்ரிக் தரவுகளை சரிபார்ப்பதற்கான அனுமதி உங்களுக்கு வழங்கப்படும்.

4) உங்களுக்கு ஆதார் கார்டு சேவை மையம் அமைக்க உரிமம் வேண்டும் என்றால் பொது சேவை மையத்திற்கான உரிமம் பெற வேண்டும்.

5) அதற்கு https://register.csc.gov.in/ என்ற இணைப்பிற்குச் சென்று பொது சேவை மையத்திற்கான உரிமம் வேண்டி பதிவுசெய்ய வேண்டும்.

6) இந்தப் பதிவை செய்த பிறகு, உங்கள் விண்ணப்பம் மற்றும் சான்றிதழ்கள் பரிசோதனை செய்யப்பட்டு பொது சேவை மையத்திற்கான உரிமை வழங்கப்படும்.

7)ஆதார் கார்டு சேவை மையம் அமைப்பதற்கான தொழில்நுட்பக் கருவிகள் பொது சேவை மையம் தளத்திலியே கிடைக்கும். அவற்றை முதலீடு செய்து வாங்கி ஆதார் கார்டு சேவை மையத்தை தொடங்க முடியும்.

8) ஒரு ஆதார் கார்டுக்கு 35 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.

No comments:

Post a Comment