மாத சம்பளக்காரர்கள் கவனிக்க வேண்டியவை: Income tax ரூல்ஸ் மாறியாச்சி.. கவனமா இருங்க! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, June 18, 2019

மாத சம்பளக்காரர்கள் கவனிக்க வேண்டியவை: Income tax ரூல்ஸ் மாறியாச்சி.. கவனமா இருங்க!

New Income Tax Rules 2019: 2018-19-ல் வருமான வரி விதிமுறைகள் மற்றும் முதலீடு குறித்த சலுகைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.


 இதனை அறிந்துகொள்வதன் மூலம் மாத சம்பளக்காரர்கள் தங்களுக்கான வருமான வரியை இன்னும் துல்லிய மாகத் திட்டமிட்டுக்கொள்ள முடியும். இந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்துள்ள முக்கியமான வருமான வரி மாற்றங்கள் இங்கே தெரிவித்துள்ளோம்

வருமான வரித் துறை அதன் ஈ- தாக்கல் இணையதளத்தை மிகவும் விரிவுப்படுத்தியுள்ளது.எனவே வரி செலுத்துவோர் ITR படிவங்களை நிரப்புவதற்கு மட்டுமின்றி ITR படிவங்களை தவறின்றி நிரப்புவதற்கும் வரிவிலக்குகளை துல்லியமாக கணக்கிடவும் உதவுகிறது

மருத்துவ வசதி, இலவச விடுதி,போக்குவரத்து அலோவன்ஸ்(allowance) கால்குலேட்டர்,வீட்டு வாடகை அலோவன்ஸ் கால்குலேட்டர், TDS கால்குலேட்டர்,கிரவுட்டிட்டி(gratuity),வீட்டின் மூலம் வரும் வருமானம் என 30 வகையான வரி/ விலக்கு கூறுகளை 30 விதமான வெவ்வெறு வின்டோஸ்கள் கணக்கிட உதவுகின்றன. இது இறுதி கட்டத்தில் வருமான வரி தாக்கல் செய்ய உதவும்.

நீங்கள் வருமானத்தை மறைத்தாலோ, வருமானத்திற்கு உரிய வரியைக் கட்டவில்லை என்றாலோ காலாகாலத்தில் வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்யவில்லை என்றாலோ உங்களுக்கு வட்டி, அபராதம், சிறைத்தண்டனை போன்றவை உண்டு. குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப தண்டனை வேறுபடும்.

வருமான வரி செலுத்தத் தவறியோர், இனி அபராதம் மட்டுமே செலுத்தி விட்டு தப்ப முடியாத வகையில் வருமான வரி விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியமானது வெள்ளிக்கிழமை இரவில் திருத்தப்பட்ட விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

 அதன்படி, வெளிநாடுகளில் சட்டவிரோதமாக வங்கிக் கணக்கு வைத்திருப்போரும், சொத்து வைத்திருப்போரும் அதிகாரிகளிடம் சிக்கும் போது, வரியும் அபராதமும் செலுத்தி விட்டு தப்பிக்க முடியாது. கருப்புப் பண ஒழிப்புச் சட்டத்தின் கீழ் இந்த விவகாரத்தில் இனி சமரசத்திற்கு இடமில்லை

புதிய விதிகளின் கீழ் இது கடும் குற்றமாக கருதப்படும். ஆதாயத்தில் இருந்து கழிக்கப்படும் வரி மற்றும் ஆதாயத்தில் இருந்து வசூலிக்கப்படும் வரியை செலுத்த தவறுதல் ஆகியவை சமரசத்திற்கு உகந்தது. இந்த புதிய விதிமுறையானது அமலுக்கு வந்தது.

No comments:

Post a Comment