பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 03.07.19
திருக்குறள்
அதிகாரம்:ஈகை
திருக்குறள்:230
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை.
விளக்கம்:
சாவு எனும் துன்பத்தைவிட வறியவர்க்கு எதுவும் வழங்க இயலாத மனத்துன்பம் பெரியது.
பழமொழி
Nothing is impossible to a willing heart
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
இரண்டொழுக்க பண்புகள்
1. நான் தான் நாளைய இந்தியாவை நிர்ணயிக்கப் போகிறேன். எனவே இப்பொழுதே சிறந்த பாரதம் உருவாக்க என் நடத்தை, எண்ணம் மற்றும் திறமைகளை சீர்தூக்கி வளர்த்துக் கொள்வேன்.
2. டீ. வி. சினிமா போன்ற பொழுது போக்குகளில் என் கவனத்தை செலுத்தாமல் ஆக்க பூர்வமாக நேரத்தை செலவிடுவேன்.
பொன்மொழி
நம் பணிகளை பிரகாசிக்கச் செய்யும் ஆற்றலானது எதுவென்றால் இயற்கையான வாழ்வு,உறவுகள், கவலைகள் ஆகிய எல்லாவற்றிலும் அழகினைக் காணுதல் மற்றும் பிறரைக் காண வைத்தல் தான் .
-- சரோஜினி நாயுடு
பொது அறிவு
1.தமிழக அரசின் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள பட்டாம்பூச்சி இனத்தின் பெயர் என்ன?
'தமிழ்மறவன்' பட்டாம்பூச்சி.
2.இந்திய வானிலை ஆய்வுத் துறையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
விஞ்ஞானி மிருதுஞ்ஜெய்(இந்தியாவின் சூறாவளி மனிதர், புயல்களை துல்லியமாகக் கணக்கிட்டு சொல்பவர்)
English words & meanings
* Race - competition between people or vehicle. பந்தயம், இனம்
* Raise - to lift or move, உயர்த்துதல்
ஆரோக்ய வாழ்வு
கருப்பு உளுந்தைக் காெண்டு செய்யப்படும் உணவுகளை குழந்தைகளுக்கு அடிக்கடி காெடுத்தால் ரத்த சாேகை ஏற்படாது.
Some important abbreviations for students
* LDL - Low Density Lipoprotein
* HDL - High Density Lipoprotein
நீதிக்கதை
ஒருநாள் முல்லா ஒரு காட்டு வழியாக வெளியூருக்குச் சென்று கொண்டிருந்தார். வழியில் ஒரு முரடனிடம் அவர் சிக்கிக் கொண்டு விட்டார்.
அந்த முரடனுக்கு முல்லாவைப் பற்றியும், அவருக்கு இருக்கும் புகழைப் பற்றியும் நன்றாகத் தெரியும்.
அவரை அவமானப்படுத்த எண்ணிய முரடன் தன் கைவாளை உருவிக் கொண்டு ” முல்லா அவர்களே உம்மைப் பெரிய மேதாவி என்றும் எவ்வளவு பெரிய ஆபத்து ஏற்பட்டாலும் உம்முடைய அறிவினாலேயே தப்பிப் பிழைப்பீர் என்றும் பேசிக் கொள்கிறார்களே அது உண்மைதானா?” என்று கேட்டான்.
” மக்களுக்குப் பொய்பேசத் தெரியாது.. அவர்கள் உண்மையைத்தான் பேசுகிறார்கள்” என்றார் முல்லா.
” அப்படியானால் உமது அறிவுச் சாதுரியத்தை நிரூபித்துக் காண்பியும் பார்க்கலாம். இதோ இந்த உடை வாளால் உமது கழுத்தை வெட்டப் போகிறேன், உம்மால் தப்பிப் பிழைக்க முடியுமா ?” என்று முரடன் கேட்டான்.
” உம்முடைய கைவாளுக்குத் தப்பிப் பிழைக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை” என்று கூறிய முல்லா திடீரென வானத்தைப்பார்த்து விட்டு மகிழச்சியுடன் சிரித்தார்.
” என்ன சிரிக்கிறீர் ” என்று முரடன் கேட்டான்.
” அன்பரே, உமது கைவாள் எனது தலையைத் துண்டிக்கும் முன்பு அதோ வானத்திலே கண்களைப் பறிக்கும் அழகுடன் சிறகுகளை அசைத்துப் பறக்கும் அந்த வினோதமான தங்கப் பறவையை ஆசை தீரப் பார்த்து விடுகிறேன். அதற்குப் பிறகு நீர் எனது தலையை வெட்டி விடலாம் ” என்றார் முல்லா.
” தங்கப் பறவையா வானத்தில் பறக்கிறது?” என்ற முரடன் வியப்புடன் ஆகாயத்தை அண்ணாந்து நோக்கினான்.
முல்லா குபீரெனப் பாய்ந்து முரடன் கையிலிருந்த வாளைத் தட்டிப் பறித்து விட்டார்.
” நண்பனே, உம்முடைய உயிர் என் கையில் இருக்கிறது. நான் நினைத்தால் உமது தலையை வெட்டி வீழ்த்திவிட முடியும் ” என்றார் முல்லா.
” முல்லா அவர்களே நீர் வெற்றி பெற்றுவிட்டீர் என்னை மன்னிக்க வேண்டும்” என்று முரடன் தாழ்ந்து அவரை வணங்கினான்.
” அன்பனே, கடவுள் சித்தமில்லாமல் எந்த உயிரையும், யாரும் அழித்துவிட முடியாது என்பதை உணர்ந்து கொள்ளும் ” என்று கூறி வாளை முரடனிடம் கொடுத்து விட்டு முல்லா தன்வழி நடந்தார்.

புதன்
கணக்கு & கையெழுத்துப் பயிற்சி
புதிர் விளையாட்டு
1. நீயும் நானும் நண்பர்கள்
2. ராஜாவும் நீயும் நண்பர்கள்
3. ராஜா உனக்கு நண்பன் எனில் எனக்கும் நண்பன் அல்லவா ?
4. எனவே நானும் ராஜாவும் நண்பர்கள்
கேள்வி:
ஆக மொத்தம் நண்பர்கள் எத்தனைப்பேர்.?
அவர்கள் மூலம் ஒரு கணித வடிவம் ஒன்று சொல்லுங்கள் ...
விடை : 3 பேர்
வடிவம் : முக்கோணம்
இன்றைய செய்திகள்
03.07.2019
* நீர்நிலைகளை பாதுகாக்க ‘ஜல்சக்தி அபியான்’ திட்டத்தை டெல்லியில் மத்திய மந்திரி கஜேந்திரசிங் செகாவத் தொடங்கி வைத்தார்.
* மேட்டூர் அணை நீர்மட்டம் 43 அடியாக சரிந்தது. குறுவை சாகுபடியும் செய்யாமல், சம்பா சாகுபடியும் செய்ய முடியாமல் டெல்டா விவசாயிகள் தவித்து வருகிறார்கள்.
* காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவராக அருண்குமார் சின்கா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் செர்பியா வீரர் ஜோகோவிச் வெற்றி பெற்றார். முன்னணி வீர்ர்களான ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகாவும், வீனஸ் வில்லியம்ஸூம் அதிர்ச்சி தோல்வி அடைந்தனர்.
* உலககோப்பைக் கிரிக்கெட் : வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியாவின் ரோகித் சர்மா சதமடித்தார்.
Today's Headlines
🌸" The Jalsakti Abhiyan" project was launched in Delhi by Union Minister Gajendra Singh Segawat to protect the water bodies.
🌸Mettur Dam falls to 43 feet. Delta farmers are left with no samba and kuruvai cultivation.
🌸 Arun Kumar Sinha has been appointed as the Chairman of the Cauvery Water Management Commission.
🌸Serbian player Djokovic won the men's singles at Wimbledon tennis . Japanese player Naomi Osaka and Venus Williams lost their match shockingly
* World Cup Cricket: India won by 28 runs against Bangladesh. Rohit Sharma hits century.
Prepared by
Covai women ICT_போதிமரம்
No comments:
Post a Comment