13 வயதில் மூன்று டிகிரிகள்: அமெரிக்காவை கலக்கிய தமிழகச் சிறுமி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, July 16, 2019

13 வயதில் மூன்று டிகிரிகள்: அமெரிக்காவை கலக்கிய தமிழகச் சிறுமி

மதுரையைச் சேர்ந்த சிறுமி ஒருவர், பதிமூன்று வயதில் பள்ளிப்படிப்புடன் கல்லூரிப் படிப்பையும் தொடங்கி மூன்று டிகிரிகளை பெற்று சாதித்துள்ளார்.

துறுதுறுப்புடன் காணப்படும் சிறுமி ஸ்ரீயா, தனது குடும்‌பத்துடன் விடுமுறையை கழிக்க அமெரிக்காவில் இருந்து மதுரைக்கு வந்துள்ளார். சிறுமி ஸ்ரீயா தான், 13 வயதில் பள்ளிப்படிப்புடன் 3 டிகிரிகளையும் முடித்துள்ளவர்


. இவரது சகோதரன் பிரணவ் 4-ஆம் வகுப்பு படிக்கும்போதே கல்லூரிப் படிப்பையும் சேர்த்து படிக்கத் தொடங்கினார். தற்போது 16 வயதாகும் பிரணவ், தனது பத்தாம் வகுப்பு படிப்புடன் 4 டிகிரிகளை முடித்துவிட்டு நியூக்ளியர் அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளார்


. சகோதரனின் படிப்பாலும் திறமையாலும் ஈர்க்கப்பட்ட ஸ்ரீயா, தனது 7 வயதில் இருந்தே பள்ளிப்படிப்புடன் கல்லூரி படிப்பை படிக்க ஆரம்பித்துவிட்டா

3 டிகிரிகளை முடித்த ஸ்ரீயா, ஸ்டான்போர்ட்டில் ரோபோக்கள் தொடர்பாக ஆராய்ச்சி மற்றும் கல்வியை தொடர உள்ளதாக கூறுகிறார். மேலும் தன்னைப் போல மற்றவர்களும் எளிதாக கற்கும் வகையில், யுடியூபில் கல்வி தொலைக்காட்சியையும் நடத்தி வருகிறார்.

மகன், மகள் இருவரும் ஆர்வத்துடன் கல்வியில் சாதிப்பது பெற்றோரை பெருமையடையச் செய்துள்ளது. அமெரிக்காவிலேயே 20 ஆண்டுகளாக இருந்தபோதும் தாய்மொழியை பிள்ளைகள் மறந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக கூறும் ஸ்ரீயாவின் தாய், ஸ்ரீயா நன்றாக தமிழ்ப் பேசுவார் எனவும் கூறியுள்ளார்.

கல்லூரியில் மிகக் குறைந்த வயதுடைய மாணவி என்ற பெருமை பெற்றுள்ள ஸ்ரீயா, தினமும் தனது நேரத்தை திட்டமிட்டு செலவு செய்வதால் பள்ளிப்படிப்பு, கல்லூரி படிப்பு, விளையாட்டு, வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்ய முடிகிறது என்கிறார். படிப்பை சுமையாக கருதாமல் அறிவூட்டும் அம்சமாக பார்ப்பதால் இந்தச் சிறுமி இந்த வயதிலேயே அடுத்தடுத்த உயரங்களை எட்டிக்கொண்டிருக்கிறார்

No comments:

Post a Comment