1,500 அரசு பள்ளிகள் மூடும் அபாயம் வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, July 14, 2019

1,500 அரசு பள்ளிகள் மூடும் அபாயம் வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்

தமிழகத்தில் 1,500 அரசு பள்ளிகள் மூடும் நிலையில் இருப்பதால், தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.


 இதுகுறித்து, அவர் மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:விண்வெளி ஆராய்ச்சி துறையில் சந்திராயன்-2 செயற்கைகோள் வெற்றிகரமாக அனுப்பப்பட உள்ளது.


 நாடு முழுவதும் நதிநீர் பிரச்னை உள்ளது. எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு காணத்தான் நதிநீர் தீர்ப்பாயம் அமைக்கப்படவுள்ளது.


 தமிழகத்தில் 1,500 அரசு பள்ளிகள் ஒரு மாணவர்கூட சேராமல் மூடப்படும் நிலையில் உள்ளன. ஒரு லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளியை நோக்கி சென்று கொண்டுள்ளனர்.

அரசு பள்ளிகள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.


தமிழகத்தில் தனியார் பள்ளிகள் புற்றீசல்போல் வருகிறது. தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும். தமிழகத்தில் மொழிக்கொள்கை ஒன்றும் இல்லை.


தமிழகத்தில் இந்தாண்டு முதல் இந்தி சொல்லிக்கொடுக்கும் பள்ளிகளை மூட முடியுமா? இலங்கை தமிழர் பிரச்னையில் ப.சிதம்பரம் என்ன செய்தார். நிதித்துறை அமைச்சராக இருந்த சிதம்பரம் தமிழகத்திற்கு ஒன்றும் செய்யவில்லை.


 தபால்துறையில் கடந்த முறை தேர்வில் தமிழில் நடைபெற்ற தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளன. கடித போக்குவரத்துக்கு ஏதுவாக ஆங்கிலத்தில் தேர்வு நடைபெறுகிறது.


 இந்தியா முழுவதும் இந்தி மயமானாலும், தமிழகத்தில் தமிழ் மட்டுமே இருக்கிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment