சென்னை மாநகராட்சி சார்பில் 1700 மாணவிகளுக்கு விழிப்புணர்வு முகாம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, July 31, 2019

சென்னை மாநகராட்சி சார்பில் 1700 மாணவிகளுக்கு விழிப்புணர்வு முகாம்

சென்னை மாநகராட்சி சார்பில் 1700 மாணவிகளுக்கு தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.


சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறை சார்பாக தூய்மை இந்தியா திட்டம்  குறித்து பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் தொடர்ந்து  நடத்தப்பட்டு  வருகிறது.


அதன்படி சைதாப்பேட்டை சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் 1700 மாணவியர்கள் மற்றும் 74 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


இதில் தண்ணீரை மட்டும் உபயோகித்து கைகளை கழுவுவதினால் மட்டும்  நோய்க் கிருமிகளை அழிக்க முடியாது.  சோப்பு உபயோகித்து 20 நொடிகள் முறைப்படி கழுவுவதினால் நோய்க்  கிருமிகளை அழிக்க முடியும் என்று மாணவிகளுக்கு விளக்கி கூறப்பட்டது.

இதன்பிறகு மாணவியர்களுக்கு முறையாக சோப்பு உபயோகித்து கைகழுவும் 10 நிலைகள் கொண்ட செய்முறை பயிற்சியும் அளிக்கப்பட்டது. பின்னர் மாணவியர்கள் அனைவரும் முறையாக சோப்பு உபயோகித்து கைகளை கழுவினர்.



மேலும், தூய்மை இந்தியா திட்டத்தின் முக்கிய நோக்கங்கள், அதனை நிறைவேற்றுவதில் மாணவியர்களின் பங்கு, குப்பை தரம் பிரித்து அளித்தலின் அவசியம் குறித்தும் விளக்கப்பட்டது.


இறுதியில்,  மாணவியர்கள் அனைவரும் குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என்று வகைப்பிரித்து அளிப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


இந்நிகழ்ச்சியில், சுகாதார கல்வி அலுவலர் டி.ஜி..சீனிவாசன், மண்டல அலுவலர் சங்கர், செயற்பொறியாளர் சின்னதுரை மற்றும் தலைமையாசிரியை பத்மஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment