1 கி.மீட்டருக்குள் அரசு பள்ளிகள் இருந்தால் ஆர்டிஇ சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்ப்பதை தடுக்க சட்டம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, July 2, 2019

1 கி.மீட்டருக்குள் அரசு பள்ளிகள் இருந்தால் ஆர்டிஇ சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்ப்பதை தடுக்க சட்டம்

அமைச்சரவையில் முடிவு எடுக்கப்படும்


 கல்வி அமைச்சர்  தகவல்


1 கி.மீட்டர் சுற்றளவுக்குள் அரசு பள்ளிகள் இருக்கும் இடத்தில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், மாணவர் சேர்க்கை அனுமதி வழங்குவதில்லை என்றும், ஆலோசனை நடந்து வருவதாகவும், அமைச்சரவையில் முடிவு எடுத்து விரைவில் அறிவிப்போம் என்று பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

 சட்டசபையில் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் காஞ்சிபுரம் எழிலரசன் (திமுக) பேசியதாவது:

 கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி 1 கி.மீ சுற்றளவில்  கி.மீ சுற்றளவுக்குள் அரசு பள்ளிகள் இருந்தால் தனியார் பள்ளிகளில் சேர்க்கக் கூடாது.


ஆனால், அரசு பள்ளி இருக்கும் பகுதியில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கின்றனர்.


 இப்படி செய்வது அரசு பள்ளிகளை மூடுவது போல் ஆகி விடும். எனவே, இதில் மாற்றம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சர் செங்கோட்டையன் :

 உறுப்பினர் நல்ல ஆலோசனை வழங்கி இருக்கிறார். அரசு பள்ளிகள் அமைந்துள்ள 1 கி.மீ சுற்றளவு பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க கூடாது என்று கர்நாடக மாநில அரசு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளனர். அதே போன்று தமிழகத்தில் சட்டமாக்குவது தொடர்பாக முதல்வர் பரிசீலித்து வருகிறார்.

 இது தொடர்பாக அமைச்சரவையில் முடிவு எடுத்து அவையில் அறிவிப்பு வெளியிடப்படும்

No comments:

Post a Comment