மருத்துவ கலந்தாய்வின் 2ம் நாளான நேற்று வெளிமாநிலத்தை பூர்வீமாக கொண்ட 2 பேர் கவுன்சலிங்கில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.இந்த ஆண்டு நீட் தேர்வு மே 5ம் தேதி நடந்தது. தமிழகத்தில் 1,23,078 பேர் தேர்வு எழுதினர். அதில் 59,785 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பித்தல் ஜூன் 7ம் தேதி தொடங்கி 20ம் தேதி முடிந்தது. அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு 39,013 பேர்களும், நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு 29,007 பேர்களும் என மொத்தம் 68,020 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த மாணவர்களுக்கான தரவரிசைப்பட்டியலை ஜூலை 6ம் தேதி காலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார். பொதுப்பிரிவு கலந்தாய்வின் முதல் நாளில் 1,013 பேர் பங்கேற்க அழைக்கப்பட்டு 977 பேருக்கு சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
நேற்றைய கலந்தாய்வில் பங்கேற்க 1,486 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதில் ெவளிமாநிலத்தை பூர்வீகமாக கொண்ட 2 பேர் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழகத்தில் படித்ததற்கான ஆவணங்கள் சமர்பிக்காததால் கலந்தாய்வில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இன்றைய கலந்தாய்வுக்கு தரவரிசைப்பட்டியலில் 2,502 முதல் 4,483 வரை ரேங்க் பெற்ற 1981 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment