2000 கையில இருந்தா செல்பி எடுங்க! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, July 21, 2019

2000 கையில இருந்தா செல்பி எடுங்க!

ஓடும் ரயில்கள் மற்றும் ரயில்வே ஸ்டேஷன்களில், 'செல்பி' எடுத்தால், 2,000 ரூபாய்அபராதம் விதிக்கப்படும்' என, ரயில்வே போலீசார் எச்சரித்துள்ளனர்

செல்பி மோகத்தால், ஓடும் ரயில்களில்தொங்கியும், பயணம் செய்யும் போதும், தண்டவாளத்தின் அருகேநின்று, ரயில்கள் செல்லும் போதும், இளைஞர்கள் செல்பி எடுத்துக் கொள்கின்றனர்; இதனால், உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதைதடுக்க, 'செல்பி எடுத்தால், 2,000 ரூபாய்அபராதம் விதிக்கப்படும்' என, ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்

இது குறித்து ரயில்வே போலீசார் மேலும் கூறியதாவது: ரயில்களில்ஆபத்தான முறையில், செல்பி எடுப்பதால், வாரத்துக்கு, 10 பேராவது, ரயிலில்சிக்கி பலியாகின்றனர். இதனால், ரயில்வே ஸ்டேஷன்கள், ஓடும் ரயில்களில்செல்பி எடுத்தால், 2,000 ரூபாய்அபராதம் விதிக்கமுடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, ரயில்வே ஸ்டேஷன்களில், ஒலிபெருக்கியில் பயணியருக்கு தகவல் தெரிவித்து, எச்சரிக்கை செய்யப்படுகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்

No comments:

Post a Comment