2020 ஆம் ஆண்டிற்கான கேட் (GATE) எனப்படும் பொறியியல் பட்டதாரிகளுக்கான நுழைவுத்தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2019 ஆண்டிற்கான இந்த தேர்வை சென்னை ஐஐடி கல்வி நிறுவனம் நடத்திய நிலையில், 2020 ஆம் ஆண்டிற்கான தேர்வை டெல்லி ஐஐடி கல்வி நிறுவனம் நடத்த உள்ளது.
இதன் மூலம் தேர்வாகும் தேர்வர்கள் இந்தியாவில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்களில் முதுநிலைப் படிப்புகளான எம்.இ / எம்.டெக் / பி.எச்.டி பட்டப்படிப்புகளில் சேரவும்அந்த மதிப்பெண் முக்கிய தகுதியாக பார்க்கப்படுகிறது.
அத்துடன் பல்வேறு மத்திய அரசு நிறுவனங்களிலும், தனியார் நிறுவனங்களிலும் வேலைக்கு சேர்வதற்கான தகுதியாகவும் இந்த தேர்வு மதிப்பெண்ணுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் 3 வருடங்கள் வரைமதிப்பில் எடுத்துக்கொள்ளப்படும்.
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 03.09.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.09.2019
கூடுதல் அவகாசத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு கடைசி நாள்: 01.10.2019
தேர்வு மையத்தை மாற்றியமைக்க கடைசி நாள்: 15.11.2019
தேர்வுக்கான நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்ய கடைசி நாள்: 03.01.2020
தேர்வு நடைபெறும் தற்காலிகமான தேதிகள்:
01.02.2020, 02.02.2020, 08.02.2020 மற்றும் 09.02.2020
தேர்வு முடிவு வெளியாகும் தேதி: 16.03.2020
தேர்வுக்கட்டணம்:
1. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / பெண்கள் / மாற்றுத்திறனாளிகள் - ரூ.750
2. எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / பெண்கள் / மாற்றுத்திறனாளிகள் தவிர மற்ற பிரிவினர் - ரூ.1500
கல்வித்தகுதி:
குறைந்தபட்ச கல்வித்தகுதியாக, 4 வருட பி.இ / பி.டெக் / நேவல் ஆர்க்கிடெக்சர் பட்டப்படிப்பு முடித்தவர்களும், 5 வருட ஆர்க்கிடெக்சர் பட்டப்படிப்பு முடித்தவர்களும், 5 வருட முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்களும், 5 வருட ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகளை முடித்தவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
குறிப்பு:
மேற்குறிப்பிட்ட அனைத்து பட்டப்படிப்புகளில் கடைசி வருடம் கல்லூரிகளில் படித்துக் கொண்டிருப்பவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், http://gate.iitm.ac.in/ - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை:
கணினி வழித்தேர்வு - 25 வகையான வெவ்வேறு தேர்வு பாடத்திட்டம்.
மேலும், இது குறித்த முழு தகவல்களுக்கு http://gate.iitd.ac.in/PDFs/GATE_2020_IB.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

No comments:
Post a Comment