தமிழகத்தில் இருந்து புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேர், நேற்று பதவியேற்றுக்கொண்டனர்.
தி.மு.க கூட்டணியில் இருந்து போட்டியிட்டு வெற்றிபெற்ற வைகோவும் பதவியேற்றுக் கொண்டார். 23 ஆண்டுகளுக்குப் பின்னர், நாடாளுமன்றத்துக்குள் காலடி எடுத்துவைத்த வைகோ, அந்த வளாகத்தில் இருந்த தமிழகத் தலைவர்களின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார்.
பதவியேற்றுக்கொண்ட பின்னர், ஜவுளித்துறை தொடர்பாக அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் அவர் கேள்வி எழுப்பினார்.
அவர் பேசுகையில், ``அவைத்தலைவர் அவர்களே, 23 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த மேலவையில் கன்னி உரையாக முதல் துணைக்கேள்வி எழுப்ப வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி
பருத்தி விலை, பஞ்சு விலை மேலும் கீழுமாய் திடீர் திடீரென மாறுவது ஒவ்வோர் ஆண்டும் நூற்பு ஆலைகளுக்கு நெருக்கடி ஆகிறது.
மூடப்பட்ட ஆலைகளால் இந்தியாவில் எத்தனை லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்தார்கள்.
தமிழ்நாட்டில், நூற்பு ஆலைகள் சுற்றுச்சூழல் விதிகளை முறையாகப் பின்பற்றுகின்றன. மற்ற மாநிலங்களில் அப்படிப் பின்பற்றுவது இல்லை.
இதனால், தமிழக நூற்பு ஆலைகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் விதிகளை சமமாகப் பின்பற்ற அமைச்சர் நடவடிக்கை ஏடுப்பாரா?
சீனாவில் இருந்து ஏராளமான ஆயத்த ஆடைகளைக் குறைந்த விலையில் வங்கதேசத்திற்கு அனுப்புகிறார்கள்.
அங்கே, அந்த நாட்டு முத்திரை பதித்து இந்தியாவிற்குள் கொண்டு வந்து குவிக்கிறார்கள். இதனால், நமது நூற்பு ஆலைகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.
இதைத் தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கும்?'' என்று கேள்வி எழுப்பினார்.
இந்தக் கேள்விக்குப் பதிலளித்த மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, `விதிமுறைகள் நாடு முழுவதும் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன; தமிழகத்தில் இருக்கும் நூற்பு ஆலைத் தொழிலை முடக்குவதற்காக மட்டுமே அவை இல்லை. மத்திய அரசு, தமிழக அரசுடன் இணைந்து உற்பத்தியை அதிகரிப்பதற்கான பல்வேறு நடைமுறைகள்குறித்து ஆய்வு செய்துவருகிறது.
ஜவுளிப் பொருள்கள் விவகாரத்தில் வங்கதேசத்துக்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதிகுறித்து, அந்தப் பொருள்கள் தயாரிக்கப்பட்ட இடம் குறித்து வெளியுறவுத்துறையின் உதவியோடு ஆய்வுசெய்யப்படும். இதன்மூலம், வங்கதேசம் வழியாக சீனத் தயாரிப்புப் பொருள்கள் நமது சந்தையில் குவியாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
வைகோ தனது பேச்சைத் தொடங்கையில், அவையில் இருந்த பிரதமர் மோடி மேசையைத் தட்டி வரவேற்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment