அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர் எண்ணிக்கை 2 லட்சம் குறைவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, July 16, 2019

அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர் எண்ணிக்கை 2 லட்சம் குறைவு

அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர் எண்ணிக்கை 2,47,629 பேர் குறைவு என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


 சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட புள்ளி விவர ஆவணத்தில் இந்த தகவல் இருப்பதாக வெளியாகியுள்ளது.


 அதேபோல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர் எண்ணிக்கை 1,67,929 பேர் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 ஒட்டுமொத்தமாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை  4,15,558 பேர் குறைவு என கூறப்படுகிறது.


 தனியார் பள்ளிகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 12,10,055 மாணவர்கள் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைத்து வருவருவதால் கடந்த சில ஆண்டுகளாக அரசு பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் தனியார் பள்ளிகள் அசுரத்தனமான வளர்ச்சியடைந்து வருகின்றன.


 எனவே அரசு பள்ளிகளை வலுப்படுத்த வேண்டும் என்றும், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment