தமிழ் மொழி 2-ம் நிலைத்தேர்வில் தேர்ச்சி அடையாத ஆசிரியர்களின் விவரங்களை உடனடியாக அனுப்ப வேண்டும் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, July 20, 2019

தமிழ் மொழி 2-ம் நிலைத்தேர்வில் தேர்ச்சி அடையாத ஆசிரியர்களின் விவரங்களை உடனடியாக அனுப்ப வேண்டும்

தமிழை மொழிப்பாடமாக பயிலாமல் அரசுப்பள்ளிகளில் பணியாற்றிவரும் ஆசிரியர்களின் விவரங்களை ஓப்படைக்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


தமிழை ஒரு மொழிப்படமாக பயிலாமல் பிற மொழிகளில் பயின்று பட்டம் பெற்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், டி.என்.பி.எஸ்.சியால் நடத்தப்படும் தமிழ்மொழி 2ம் நிலை தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாகும். பணியில் சேர்ந்த 2 ஆண்டுகளுக்குள் இந்த தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும்.


 இந்த நிலையில் தமிழ்மொழி 2ம் நிலை தேர்வை எழுதி தேர்ச்சி பெறாமல், தொடர்ந்து அரசுபள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களின் விவரங்களை உடனடியாக அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

 அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது 

No comments:

Post a Comment