சட்டீஸ்கரில் நடந்த அரசு பணியாளர் தேர்வில் முதல் 2 இடங்களில் வென்று புத்திசாலி தம்பதியர் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளனர்.சட்டீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூர் நகரில் வசித்து வரும் அனுபவ் சிங், விபா சிங் புதுமண தம்பதியர் ஆவர். இவர்கள் இம்மாநில அரசு நடத்திய அரசு பணியாளர் தேர்வில் கலந்து கொண்டனர்.
இதற்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில், இந்த தம்பதியர் தேர்ச்சி பெற்று முறையே முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளனர். அனுபவ் சிங் முதலிடத்தையும், விபா சிங் 2வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
தேர்வு வெற்றி குறித்து தம்பதியர் கூறுகையில், ``இன்று நாங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பதை விவரிக்க இயலாது. நாங்கள் மிகவும் ஆர்வத்துடன் இந்த தேர்வுக்கு தயாரானோம். படிக்கும் போது கூட, இருவரும் ஒருவருக்கு ஒருவர் உதவும் வகையில் படித்தவற்றை பகிர்ந்து கொள்வோம்,’’ என்றனர்

No comments:
Post a Comment