மோசடி மொபைல் ஆப்ஸ்; ₹2 லட்சம் பறிபோச்சு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 29, 2019

மோசடி மொபைல் ஆப்ஸ்; ₹2 லட்சம் பறிபோச்சு

எல்லாமே ஆன்லைன் மயமாகி விட்டது. பொருட்கள் வாங்குவதில் தொடங்கிய இந்த ஆன்லைன் பழக்கம், தற்போது உணவு ஆர்டர் வரை வந்து விட்டது.


 ஓட்டலுக்கு சென்று பார்சல் வாங்குவதை விட, மொபைல் ஆப்ஸ் மூலம் அல்லது ஆன்லைன் வெப்சைட்களில் எளிதாக ஆர்டர் செய்து பணத்தையும் அதிலேயே செலுத்தி விடுகின்றனர்


.இப்படி, ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்த ஒருவர், வங்கியில் இருந்து கழிக்கப்பட்ட பணத்தை திரும்ப பெற முயற்சி செய்யும்போது நடந்த மோசடியில் வங்கி கணக்கில் இருந்த ₹2.28 லட்சம் ரூபாயை இழந்து விட்டார்.


மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் சந்தீப் சவுபே. கடந்த 15ம் தேதி ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்தார். அப்போது, ஏற்கெனவே இருந்த ₹280 பாக்கியும் சேர்த்து அவரது வங்கிக் கணக்கில் இருந்து கழிந்து விட்டது.

உடனேயே, பண பரிவர்த்தனை இணையதள நிறுவனத்துக்கு புகார் அனுப்பினார்.


இரண்டு நாட்கள் கழித்து அவருக்கு ஒருவர் போன் செய்தார். சம்பந்தப்பட்ட பண பரிவர்த்தனை இணையதள ஊழியர் என அறிமுகம் செய்து கொண்டார். ₹280 பணத்தை ரீபண்ட் பெற சந்தீப்புக்கு உதவுவதாகவும் கூறினார்.சர்வர் சரியாக இல்லை என்பதால், சந்தீப்பின் மொபைலில் ஒரு ஆப்சை பதிவிறக்கம் செய்யுமாறும், அதில் விவரங்களை பதிவு செய்து பாஸ்வேர்டை கூறுமாறும் கேட்டுக்கொண்டார்.


 இதை நம்பிய சந்தீப், அந்த நபர் கூறியபடி தனது ஸ்மார்ட் போனில் சம்பந்தப்பட்ட ஆப்சை பதவிறக்கம் செய்தார். அவர் கூறியபடி பாஸ்வேர்டை தெரிவித்தார்.அடுத்த சில நிமிடங்களிலேயே, போனில் பேசியவர் சந்தீப்பின் மொபைல் போனை தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொண்டார்.

அதன்பிறகு திடீரென சுதாரித்த சந்தீப், தனது கணக்கில் இருந்த பணத்தை தனது மனைவியின் வங்கிக் கணக்கிற்கு மாற்ற முயன்றார். அப்போது, அவரது வங்கி கணக்கில் இருந்து ₹50,000 எடுக்கப்பட்டு விட்டதாக எஸ்எம்எஸ் வந்தது.


 உடனே வங்கிக்கு போன்ற செய்து டெபிட் கார்டையும், வங்கி கணக்கையும் முடக்குமாறு கேட்டுக்ெகாண்டார்.ஆனால் வங்கியில் டெபிட் கார்டை மட்டும் பிளாக் செய்துள்ளனர். அடுத்த நாள் தொடர்ந்து 30 பரிவர்த்தனைகள் செய்ய முயற்சி நடந்துள்ளது.


இதில் 15 பரிவர்த்தனைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு ₹2.28 லட்சம் பணம் திருடப்பட்டு விட்டது. வங்கி வாடிக்கையாளர் சேவை மந்தமாக நடந்ததால்தான் உடனடியாக மோசடியை தடுக்க முடியவில்லை என்று கூறிய சந்தீப், இதுபற்றி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

No comments:

Post a Comment