பொறியியல் கலந்தாய்வு:தமிழகத்தில் 35 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, July 23, 2019

பொறியியல் கலந்தாய்வு:தமிழகத்தில் 35 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை

பொறியியல்கலந்தாய்வின் 3 சுற்றுகள் நிறைவுபெற்றுள்ள நிலையில், தமிழகத்தில் 35 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்பது தெரியவந்துள்ளது.


தமிழகத்தில் நான்கு சுற்றுகளாக நடைபெறும் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் கலந்தாய்வு கடந்த மாதம் 25ம் தேதி தொடங்கியது.


முதல் மூன்று நாள்கள் சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான நேரடி கலந்தாய்வு சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் வளாகத்தில் நடைபெற்றது.


அதோடு, பிளஸ்-2 தொழில் பிரிவு மாணவர்களுக்கான நேரடி கலந்தாய்வு ஜூலை 26ம் தேதி தொடங்கி 28 வரை மூன்று நாள்கள் நடைபெற்றது.


அதைத் தொடர்ந்து, பொதுப்பிரிவு மாணவர்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி தொடங்கி, 3 சுற்றுகள் நிவைுபெற்றுள்ளன.

இந்நிலையில், 3 சுற்று கலந்தாய்வின் முடிவில் அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரி, சேலம் கைத்தறி தொழில்நுட்ப கல்லூரி, சிவகங்கையில் உள்ள சிக்ரி ஆகிய 3 கல்லூரிகளிலும் 100% இடங்கள் நிரம்பியுள்ளன. 8 கல்லூரிகளில் 99 சதவிதத்திற்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பியுள்ளன.


10 கல்லூரிகளில் 90-98 சதவிகித இடங்கள் நிரம்பியுள்ளன. 12 கல்லூரிகளில் 80-89 சதவிகித இடங்கள் நிரம்பியுள்ளன.


23 கல்லூரிகளில் 60-79 சதவிகிதம் வரையிலான இடங்கள் நிரம்பியுள்ளன. 115 கல்லூரிகளில் 5 சதவிகிதத்திற்கும் குறைவான இடங்களே நிரம்பியுள்ளன


. 80 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 35 கல்லூரிகளில் ஒரு இடம் கூட இதுவரை நிரம்பவில்லை.


மொத்தமுள்ள 1,72,940 இடங்களில் 26 சதவிகிதமான 45,662 இடங்களே தற்போது வரை நிரம்பியுள்ளன. 37,598 மாணவர்கள் 4வது சுற்று கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்

No comments:

Post a Comment