ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் பகுதியை ேசர்ந்தவர் சோபியா கான்(33). விமானத்துறையில் பணிபுரிந்து வருகிறார்.
இவர் கின்னஸ் சாதனைக்காக ‘நம்பிக்கை’ என்ற தலைப்பில் உலக நன்மை, சமாதானம், மனிதநேயம், அமைதி, சமதர்மம், முதியோரை பாதுகாத்தல், இந்தியாவை நேசிப்போம், சிறுவர், சிறுமியரை பாதுகாப்போம் ஆகியவற்றை வலியுறுத்தி, கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதி காஷ்மீர் மாநிலம் நகரில் இருந்து மாரத்தான் ஓட்டத்தை தொடங்கினார்
.பல மாநிலங்களை கடந்து 87வது நாளான நேற்று கன்னியாகுமரிக்கு வந்தார். அவரை பத்மனாபபுரம் சப்-கலெக்டர் சரண்யா அறி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
பின்னர் முக்கடல் சங்கமத்தில் கால்நனைத்து வணங்கிய சோபியா ஓட்டத்தை நிறைவு செய்தார். பின்னர், அரசு விருந்தினர் மாளிகையில் விவேகானந்தா கல்லூரி மாணவ, மாணவியருடன் கலந்துரையாடினார்.
இதற்கான ஏற்பாடுகளை நேரு யுவ கேந்திரா ஒருங்கிணைப்பாளர் தினேஷ்குமார் செய்திருந்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் விஜயகுமார், மாவட்ட அத்லெட்டிக் அசோசியேஷன் தலைவர் பிரவீன் மேத்யூ, விவேகானந்தா கல்லூரி பேராசிரியர் டாக்டர் இளங்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாரத்தான் ஓட்டம் குறித்து சோபியா கான் கூறுகையில், நான் தினமும் 3 மணி நேரம் ஓடுவேன்.
மொத்தம் 4,035 கி.மீ ஓடி வந்துள்ளேன். வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வும் ஏற்பட்டுள்ளது என்றார்.

No comments:
Post a Comment