கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு பொது தேர்வுகளில் திருப்பூர் மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்தது.
பிளஸ்-1 தேர்வில் 2-ம் இடம் பெற்று சாதனை படைத்தது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதமும் அதிகரித்து இருந்தது.
இந்த நிலையில் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகளும் தொடங்கப்பட்டன. இதனால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். ஆனால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளி என 41 பள்ளிகளில் 1-ம் வகுப்பில் மாணவர்கள் யாரும் சேரவில்லை என்ற தகவல் கல்வித்துறை அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இது குறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது கூறியதாவது-
திருப்பூர் மாவட்டத்தில் 910 அரசு தொடக்க பள்ளிகளும், 257 நடுநிலைப்பள்ளிகளும் உள்ளன. இவற்றில் கிராம பகுதிகளில் உள்ள 41 பள்ளிகளில் 1-ம் வகுப்பில் மாணவர்கள் யாரும் சேரவில்லை. இதற்கான காரணம் குறித்து அந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி பள்ளி கல்வித்துறைக்கு அறிக்கை சமர்பிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:
Post a Comment