ஆச்சர்யமூட்டும் 5ஜி தொழில்நுட்பம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 1, 2019

ஆச்சர்யமூட்டும் 5ஜி தொழில்நுட்பம்


தொழிற்புரட்சியின் இதயமாக மாறப்போகும் 5ஜி தொழில்நுட்பம், மொபைல் சேவையை உற்பத்தி மற்றும் சேவைத் துறையோடு இணைக்க உள்ளது.

இந்த 5 ஜி தொலைத் தொடர்பு சேவையை விரிவுபடுத்த ஒத்துழைக்க வேண்டும் என்று சீன அதிபர் சி சின்பிங் இந்தியா, ரஷ்யாவிடம் வலியுறுத்தி இருக்கிறார். ஜி 20 மாநாட்டிற்கு இடையே சீன அதிபர் ஜின்பிங், பிரதமர் நரேந்திரமோடி, ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோரிடையே முத்தரப்பு பேச்சுவார்த்தையில் இதனை கேட்டுக்கொண்டிருக்கிறார். அண்மைக்காலமாக அடிக்கடி உச்சரிக்கப்படும் தொழில்நுட்ப பெயராக மாறியிருக்கும் 5ஜி தொழில்நுட்பம், மொபைல் போன்களை உற்பத்தித்துறையோடு இணைக்கும் என, தொழில்நுட்பத்துறை வல்லுநர்கள் கூறியுள்ளனர். இந்த 5ஜி தொழில்நுட்பம், நான்காவது தொழில் புரட்சியின் இதயமாக விளங்கும் என்றும் வர்ணித்துள்ளனர்.

2G, 3G வரையில், ஸ்மார்ட்போன்கள் இருந்தாலும், அதனை நாம் பேசவும், இணைய வசதியைப் பயன்படுத்தவும் மட்டுமே பயன்படுத்தினோம். 4ஜி வந்தபிறகு, இண்டர்நெட் ஆப் திங்ஸ் என்ற நுட்பம் வேகமாக வளர்ச்சி கண்டது. இதன்மூலம், கேட்ஜெட்ஸ், எலக்ட்ரானிக் பொருட்கள், இயந்திரங்கள் என அனைத்தையுமே, இணையத்துடன் சேர்த்து பயன்படுத்தினோம். ஸ்மார்ட் ஹோம்கள் இதற்கு உதாரணமாகும்.

அந்த வகையில், 5ஜி தொழில்நுட்பம், அதிகளவிலான டேட்டாவை பயன்படுத்தினாலும், இதனையே ஆதார மூலமாக கொண்டு, ரோபோட்டிக் இயந்திரங்கள், ஓட்டுநர் இல்லாத கார், தானாகவே இயங்கும் வேளாண் கருவிகள் போன்றவற்றை, ஸ்மார்ட்போன்கள் மூலமே நம்மால் கையாள முடியும்.

No comments:

Post a Comment