வறுமையால் மருத்துவப்படிப்பில் சேர முடியாமல் தவித்த மாணவிக்கு மாவட்ட ஆட்சியர் ரூ. 50 ஆயிரம் நிதி உதவி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, July 31, 2019

வறுமையால் மருத்துவப்படிப்பில் சேர முடியாமல் தவித்த மாணவிக்கு மாவட்ட ஆட்சியர் ரூ. 50 ஆயிரம் நிதி உதவி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மருத்துவ கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தும் வறுமையால் படிக்க முடியாமல் தவித்த மாணவிக்கு நேரில் சென்று உதவி செய்த மாவட்ட ஆட்சியருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்தனர்.


 நந்திமங்கலம் கிராமத்தை சேர்ந்த ராஜி என்பவற்றின் மகள் பிரியா. இவர்  பன்னிரெண்டாம் வகுப்பில் 1147 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். மேலும் இவர் நடந்து முடிந்த நீட் தேர்வில் 547 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.


அவருக்கு மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது. இருந்தபோதிலும் கல்லூரி விடுதியில் தங்கி படிக்க வேண்டும் என்பதால் விடுதி கட்டணம் செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார்.


 இதை தொடர்ந்து கடந்த வாரம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமியை நேரில் சந்தித்து தமக்கு உதவி செய்யுமாறு மனு ஒன்றினை மாணவி அளித்துள்ளார்.

இந்நிலையில் மாணவி வீட்டிற்கே சென்ற மாவட்ட ஆட்சியர் கந்தசாமி மாணவி மருத்துவப் படிப்பை துவங்க ஏதுவாக முதல் கட்டமாக 50 ஆயிரம் ரூபாயை தன்னார்வலர் மூலம் வழங்கினார். தொடர்ந்து உதவி செய்யப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.


இதை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் இந்த மனிதநேயமிக்க செயலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


 இதனை போலவே திருவண்ணாமலையில் கல்லூரி படிப்பை தொடர முடியாமல் தவித்து வந்த மாணவிக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று 40 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment