சென்னையில் நடைபெற்ற வேத கணித தேர்வு.......ஒரு மணி நேரத்தில் 500 சமன்பாடுகளுக்கு தீர்வு கண்டு மாணவர்கள் சாதனை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 15, 2019

சென்னையில் நடைபெற்ற வேத கணித தேர்வு.......ஒரு மணி நேரத்தில் 500 சமன்பாடுகளுக்கு தீர்வு கண்டு மாணவர்கள் சாதனை

சென்னையில் நடைபெற்ற வேத கணித தேர்வில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு ஒரு மணி நேரத்தில் 61 ஆயிரத்து 930 கணித சமன்பாடுகளுக்கு தீர்வு கண்டு உலக சாதனை படைத்தனர். வேத கணிதம் என்பது இன்றைய கால மாணவர்களுக்கு மிகவும் அவசியமானது. இதன் மூலம் எவ்வளவு கடினமான கணித புதிர்களும் தீர்க்கப்டுகின்றன.

இந்த வேத கணிதம் அரசு தேர்வுகளை எழுதும் அனைவர்க்கும் பயனுள்ளதாக இருக்கும். சென்னை தாம்பரத்தை அடுத்த கிஷ்கிந்தா சாலையில் உள்ள தனியார் பள்ளியில் உலக சாதனை முயற்சியாக வேத கணித தேர்வு நடைபெற்றது.

 இதில், 104 மாணவர்கள் ஒரே இடத்தில் ஒரு மணி நேரத்திற்கு 500 வேத கணிதம் போடும் சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.

ஒரு மணி நேரத்தில் 1000 க்கும் மேல் வேத கணிதத்தை போட்டு மாணவர்கள் அசத்தினர்.

 இதனை கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் சாதனையை உலக சாதனையாக அங்கீகரித்து 104 மாணவர்களுக்கும் உலக சாதனைக்கான சான்றிதழ் மற்றும் மடல்களை வழங்கப்பட்டது.

 ஒரு மணி நேரத்தில் 104 மாணவர்களும் சேர்ந்து மொத்தமாக 61 ஆயிரத்து 930 வேத கணித சமன்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment