அமேசான், பிளிப்கார்ட் ,பதஞ்சலி உள்ளிட்ட 52 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, July 10, 2019

அமேசான், பிளிப்கார்ட் ,பதஞ்சலி உள்ளிட்ட 52 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை தொடர்பாக அமேசான், பிளிப்கார்ட் ,பதஞ்சலி உள்ளிட்ட 52 நிறுவனங்களுக்கு மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


 பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன் படி , உற்பத்தி மற்றும் பேக்கேஜிங்கில்  பிளாஸ்டிக் பயன்படுத்தும் நிறுவனங்கள் , அவற்றை பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் பொறுப்பை ஏற்க வேண்டும்.

 நிறுவனங்களோ அல்லது இடைத்தரகு நிறுவனங்கள் மூலமோ அந்த பிளாஸ்டிக்கை சேகரித்து மறு சுழற்சி செய்ய வேண்டும்.


இதை மேற்கொள்ள தவறியதாகக் கூறி  அமேசான், பிளிப்கார்ட், டானோன், பதஞ்சலி ஆயுர்வேத் லிமிடெட் உள்ளிட்ட 52 நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது


. திட்ட அறிக்கையை கால அளவீட்டுடன் தர தவறும் பட்சத்தில் அபராதமும், சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.

No comments:

Post a Comment