தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 52% இடங்கள் காலியாக உள்ளது - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, July 31, 2019

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 52% இடங்கள் காலியாக உள்ளது

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 52% இடங்கள் காலியாக உள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.



தமிழகத்தில் உள்ள 479 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 72 ஆயிரத்து 940 இடங்களில்  மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் கடந்த மே 2ம் தேதி பெறப்பட்டு, 31ம் தேதியுடன் முடிந்தது.


தகுதியுள்ள 1 லட்சத்து 33 ஆயிரத்து 116 மாணவ மாணவியருக்கு ஜூன் 7ம் தேதி முதல் 13ம் தேதி வரை சான்று  சரிபார்ப்பு நடந்தது.


சான்று சரிபார்ப்பில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 150 பேர் தகுதி பெற்றனர். இவர்களுக்கான  தரவரிசைப் பட்டியல் 25ம் தேதி வெளியானது. தகுதி பெற்றுள்ளவர்களில்  1 லட்சத்து 1 ஆயிரத்து 692 பேர் பொதுக் கவுன்சலிங்கில்  பங்கேற்றனர். தொழிற்கல்வி பிரிவுக்கான கவுன்சலிங்கில் 1458 பேர், தகுதி பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு விண்ணப்பித்துள்ள நபர்களில் மாற்றுத் திறனாளிகள் 216 பேர், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 1537 பேர், விளையாட்டு வீரர்கள் 4616 பேர், விண்ணப்பித்தனர். இதையடுத்து, மாற்றுத் திறனாளிகளுக்கான கவுன்சலிங் ஜூன்  25ம் தேதி தொடங்கியது.


 முன்னாள் ராணுவ வீரர்களுக்கான வாரிசுகளுக்கு 26ம் தேதியும், விளையாட்டு வீரர்களுக்கான கவுன்சலிங் 27ம் தேதியும், நடந்தன.


தொழிற்பிரிவு மாணவர்களுக்கு 26ம் தேதி  முதல் 28ம் தேதி வரை கவுன்சலிங்  நடந்தது. பொதுப்பிரிவினருக்கான கவுன்சலிங் ஜூலை 3ம் தேதி தொடங்கியது.

இதற்கு பிறகு துணை கவுன்சலிங் ஜூலை 29ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி 29ம் தேதி நடந்த துணை கவுன்சலிங்கில் 1841 பேருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதுவரை நடந்த நான்கு சுற்று கவுன்சலிங்கில் மொத்தம் 76  ஆயிரத்து 364 இடங்கள் நிரம்பின


. கடந்த இரண்டு நாட்களாக நடந்த துணை கவுன்சலிங்கில் 3272 இடங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று மாலை வரை மொத்தம் 79 ஆயிரத்து 700 இடங்கள் நிரம்பியுள்ளன.


துணை  கவுன்சலிங்கில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான கவுன்சலிங் நேற்று மாலை 4 மணிக்கு தொடங்கியதால் நேற்று இரவு 8 மணிக்கு மேலும் கவுன்சலிங் நீடித்தது. இந்நிலையில், மொத்தம் உள்ள 1,72,940 பி.இ. இடங்களில் 83,396 இடங்கள் மட்டுமே  நிரம்பியுள்ளன என்றும் 52% இடங்கள் காலியாக உள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment