தலைமை ஆசிரியராக 543 பேருக்கு பதவி உயர்வு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, July 3, 2019

தலைமை ஆசிரியராக 543 பேருக்கு பதவி உயர்வு

முதுநிலை ஆசிரியர்கள், 543 பேருக்கு, பதவி உயர்வு வழங்குவதற்கான தகுதி பட்டியலை, பள்ளி கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரிகளுக்கு, முதுநிலை பட்டதாரிகளாகவும், முதுநிலை பட்டதாரிகள், தலைமை ஆசிரியர்களாகவும், பதவி உயர்வு செய்யப்படுகின்றனர்.


 ஒவ்வொரு கல்வி ஆண்டின் துவக்கத்திலும், இந்த பதவி உயர்வு வழங்கப்படும்.இந்த ஆண்டுக்கான பதவி உயர்வு நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.


அதன்படி, 543 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க, பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது
இதற்கான தகுதி பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது.


பட்டியலில் தவறுகள் மற்றும் பிழைகள் இருந்தால், உடனடியாக, சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தகவல் அளிக்க, இயக்குனரகம் அறிவித்துள்ளது

No comments:

Post a Comment