சரியாக வேலை செய்யாத, வயது முதிர்ந்த ஊழியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வளிக்கும் வகையில், 55 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்கள் அல்லது 30 ஆண்டு பணியை நிறைவு செய்தவர்கள் பட்டியலை தயார் செய்யும்படி மண்டல அலுவலகங்களுக்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.
முன்கூட்டியே ஓய்வளிப்பதற்காக அரசுத் துறைகளில் பணியாற்றும் 1.9 லட்சம் குரூப்-ஏ, குரூப்-பி அதிகாரிகளின் செயல்பாடுகள் 2014 முதல் 2019 வரை ஆய்வு செய்யப்பட்டு வருவதாக மக்களவையில் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது.
ரயில்வேயில் தற்போது 13 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். 2020ம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கையை 10 லட்சமாக குறைக்க ரயில்வே விரும்புகிறது.
இந்நிலையில் ரயில்வே மண்டல அலுவலகங்களுக்கு ரயில்வே வாரியம் கடந்த 27ம் தேதி கடிதம் ஒன்றை அனுப்பியது.
அதில், ‘‘2020ம் ஆண்டின் முதல் காலாண்டில் 55 வயதை எட்டிய ஊழியர்கள் அல்லது ஓய்வூதியம் பெற தகுதியான 30 ஆண்டு பணியை நிறைவு செய்தவர்கள் இதில் எது முன்போ, அவர்களின் பட்டியலையும், சேவை ஆவணங்களுடன்(சர்வீஸ் ரிக்கார்ட்) இணைத்து அடுத்த மாதம் 9ம் தேதிக்குள் ரயில்ேவ வாரியத்துக்கு அனுப்ப வேண்டும்.
இவர்களின் மனம் மற்றும் உடல் தகுதி, வருகைப் பதிவு, சரியான நேரத்துக்கு அலுவலகம் வருகிறார்களா என்பது குறித்த அறிக்கையும் இணைத்து அனுப்பும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே வட்டாரங்கள் கூறுகையில், ‘‘ஊழியர்களின் ேவலை திறன் குறித்து, ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் நாங்கள் ஆய்வு மேற்கொள்வோம்.
சரியாக வேலை செய்யாதவர்கள், ஒழுங்கு நடவடிக்கை பிரச்னைகளில் சிக்கியவர்களுக்கு முன்கூட்டியே ஓய்வளிக்கப்படும். இந்த விஷயத்தில் அரசு தீவிரமாக உள்ளது’’ என்றார்

No comments:
Post a Comment