5 ஆண்டு சட்ட படிப்பு தரவரிசை அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, July 2, 2019

5 ஆண்டு சட்ட படிப்பு தரவரிசை அறிவிப்பு

அரசு சட்ட கல்லுாரிகளில், ஐந்தாண்டு, எல்.எல்.பி., படிப்புக்கு, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு சட்ட கல்லுாரிகளில், எல்.எல்.பி., ஐந்தாண்டு படிப்புக்கு, ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டன.


 இதைத் தொடர்ந்து, 'கட் - ஆப்' மற்றும் தரவரிசை பட்டியலை, தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலை வெளியிட்டுள்ளது.இந்த பட்டியலின்படி, மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.


 வரும், 6ம் தேதி கவுன்சிலிங் துவங்கி, 11ம் தேதி வரையிலும் நடக்கிறது.

இந்த முறை, தொழிற்கல்வி மாணவர்களுக்கும், 4 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.


 தரவரிசை பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு, கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கான கடிதம், பல்கலையில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது.


கடிதம் கிடைக்காதவர்கள், சட்ட பல்கலை வெளியிட்ட, கட் - ஆப் மதிப்பெண்ணுக்குள் இருந்தால், அந்த, கட் - ஆப் மதிப்பெண்ணுக்கு உரியவர்களுக்கு, கவுன்சிலிங் நடத்தப்படும் நாளில், பல்கலைக்கு நேரடியாக வந்து கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம் என, சட்ட பல்கலை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment