தமிழகம் முழுவதும் 6,029 அரசுப்பள்ளிகளில் இணையதள வசதியுடன் ஹைடெக் கம்யூட்டர் லேப் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, July 27, 2019

தமிழகம் முழுவதும் 6,029 அரசுப்பள்ளிகளில் இணையதள வசதியுடன் ஹைடெக் கம்யூட்டர் லேப்

இடம் இல்லையென உபகரணங்களை வாங்க மறுத்த பள்ளிகள்

 தமிழகத்தில் 6,029 அரசு பள்ளிகளில் இணையதள வசதியுடன் ஹைடெக் கம்யூட்டர் லேப் அமைக்கப்படவுள்ள நிலையில், இடம் இல்லையென அதற்கான உபகரணங்களை வாங்க மறுக்க கூடாது என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.


மேல்நிலை வகுப்பு படிக்கும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, இலவச லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், அனைத்து பள்ளிகளிலும் ஹைடெக் கம்யூட்டர் லேப் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள 3,090 உயர்நிலைப்பள்ளி மற்றும் 2,939 மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 6,029 பள்ளிகளில், லார்சன் அன்ட் டர்போ நிறுவனம் மூலம் ஹைடெக் லேப் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதற்காக உயர்நிலை பள்ளிகளுக்கு  தலா 10 கம்யூட்டர் உள்பட 12 உபகரணங்களும், மேல்நிலைப்பள்ளிகளுக்கு 20 கம்யூட்டர் உள்பட 12 உபகரணங்களும் அனுப்பப்பட்டு வருகிறது.

இதனிடையே, கோவை மாவட்டத்தில் 4 பள்ளிகள் மற்றும் திருவள்ளூர், நாகப்பட்டிணம், தஞ்சாவூரில் தலா ஒரு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், இந்த உபகரணங்களை வாங்க மறுத்துள்ளனர். இத்திட்ட நடைமுறை தெரியாது என மறுத்த அவர்கள், போதிய இடம் இல்லாததால் லேப் அமைக்க முடியாது என தெரிவித்துள்ளனர்


. இதனையடுத்து, சிஇஓக்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி, உரிய இடத்தை தேர்வு செய்து, லேப் அமைக்க பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும், இத்திட்டத்தின் நடைமுறை பற்றி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.


தலைமை ஆசிரியர் கூட்டத்தில், பொருள் நிரலில் வைத்து தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்திட்டத்தை செயல்படுத்த, லார்சன் அன்ட் டர்போ நிறுவனத்தினர் பள்ளிக்கு வரும்போது, முழு ஒத்துழைப்பு வழங்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட வேண்டும்.


பொறுப்பு ஆசிரியர் ஒருவரை நியமித்து, பள்ளி விடுமுறை நாட்களிலும், கணினி மற்றும் உபகரணங்களை நிறுவ ஒத்துழைப்பு வழங்க அறிவுறுத்த வேண்டும். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் இத்திட்டத்தின் நிலவரம் பற்றி அறிக்கை தயாரித்து, முதன்மை கல்வி அலுவலர்கள் அனுப்ப வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்

No comments:

Post a Comment