சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை - அதிகபட்ச சம்பளம் 65 ஆயிரம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 1, 2019

சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை - அதிகபட்ச சம்பளம் 65 ஆயிரம்

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் கிளை நீதிமன்றங்களில், பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

பணிகள்:
1. கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் (Computer Operator)
2. தட்டச்சர் (Typist)
3. உதவியாளர் (Assistant)
4. வாசிப்பாளர் / ஆய்வாளர் (Reader / Examiner)
5. ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் (Xerox Operator)

காலியிடங்கள்:
1. கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் - 76
2. தட்டச்சர் - 229
3. உதவியாளர் - 119
4. வாசிப்பாளர் / ஆய்வாளர் - 142
5. ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் - 7

மொத்தம் = 573 காலியிடங்கள்

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 01.07.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.07.2019 வரை
வங்கிகள் மூலம் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 02.08.2019 வரை

தேர்வுக்கட்டணம்:
1. பொது மற்றும் ஓபிசி பிரிவினர் - ரூ 300

2.எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் / விதவைகள் போன்றோருக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது.

மாத ஊதியம்:
1. கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் - ரூ.20,600 முதல் ரூ.65,500 வரை
2. தட்டச்சர் - ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை
3. உதவியாளர் - ரூ.20,000 முதல் ரூ.63,600 வரை
4. வாசிப்பாளர் / ஆய்வாளர் - ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை
5. ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் - ரூ.16,600 முதல் ரூ.52,400 வரை

வயது வரம்பு: (01.07.2019 அன்றுக்குள்)
1. பொது பிரிவினர் - 18 வயது முதல் 30 வயது வரை
2. எஸ்.சி / எஸ்.டி / ஓபிசி பிரிவினர் - 18 வயது முதல் 35 வயது வரை
3. ஏற்கெனவே உயர்நீதிமன்றத்தில் பணிபுரிவோர்- 18 வயதுமுதல் 45 வயது வரை

கல்வித்தகுதி:
குறைந்தபட்ச கல்வித்தகுதியாக, ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை (டிகிரி) பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.

குறிப்பு:
1. வாசிப்பாளர் / ஆய்வாளர், ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் போன்ற பணிகளை தவிர மற்ற பணிகளுக்கு கணினி சான்றிதழ் படிப்பு அவசியம் பெற்றிருத்தல் வேண்டும்.
2. கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், தட்டச்சர் போன்ற பணிகளுக்கு தட்டச்சு பயிற்சிக்கான சான்றிதழ் பெற்றிருத்தல் அவசியம்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில், https://www.mhc.tn.gov.in/recruitment/login - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறைகள்:
1. எழுத்துத் தேர்வு
2. தனித்திறன் தேர்வு (Skill Test)
3. வாய்மொழித் தேர்வு (Oral Test)

பணியமர்த்தப்படும் இடங்கள்:
தேர்வு செய்யப்படுவோர், சென்னை உயர்நீதிமன்றத்திலோ, உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையிலோ அல்லது சென்னை உயர்நீதிமன்றத்தின் கீழ் செயல்படும் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலோ பணியமர்த்தப்படுவர்.

மேலும், இது குறித்த முழுத் தகவல்களை பெற,https://www.mhc.tn.gov.in/recruitment/docs/126_2019.pdf மற்றும் https://www.mhc.tn.gov.in/recruitment/docs/127_2019.pdf- போன்ற இணையதள முகவரிகளில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment