மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பத்தின் போது, சமர்ப்பிக்காத ஆவணங்களை இன்று இரவு, 7:00 மணிக்குள் அனுப்ப வேண்டும் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, July 2, 2019

மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பத்தின் போது, சமர்ப்பிக்காத ஆவணங்களை இன்று இரவு, 7:00 மணிக்குள் அனுப்ப வேண்டும்

மருத்துவ படிப்பிற்கான விண்ணப்பத்தின் போது, சமர்ப்பிக்காத ஆவணங்களை, இன்றைக்குள், இ - மெயிலில் அனுப்பிவைக்க வேண்டும்' என, மருத்துவ கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளதால், மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்


.தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு விண்ணப்பிப்பது, ஜூன், 7ல் துவங்கி, 20ல் நிறைவடைந்தது

நீட்' நுழைவு தேர்வில் தகுதி பெற்ற, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆன்லைனின் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, தகுந்த ஆவணங்களை இணைத்து, நேரடியாகவும், தபால் வாயிலாகவும், மருத்துவ கல்வி இயக்குனரக அலுவலகத்தில் சமர்ப்பித்தனர்.

மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல், நேற்று வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது.


ஆனால், விண்ணப்பங்களின் பரிசீலனை முடியாததாலும், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான, முதற்கட்ட கவுன்சிலிங் இன்னும் நடக்காததாலும், தரவரிசை பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.


ஓரிரு நாட்களில், தரவரிசை பட்டியல் வெளியிட வாய்ப்புள்ளது.

இந்நிலையில், மருத்துவ கல்வி இயக்குனரகம், நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கை:மாணவர்களில் சிலர், விண்ணப்பத்தை மட்டும் சமர்ப்பித்துள்ளனர்.


நீட் மதிப்பெண் அட்டை, பிளஸ் 2 மதிப்பெண், மாற்றுச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், இருப்பிட சான்று, பிறப்பு சான்றிதழ், குடும்ப அட்டை, பெற்றோரின் ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை, இ - மெயில் முகவரியில், இன்று இரவு, 7:00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

அப்போது, விண்ணப்ப எண்ணையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.


இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.ஆனால், எந்த, இ - மெயில் முகவரியில் அனுப்ப வேண்டும் என்ற தகவல் குறிப்பிடப்படாததால், மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்


.இதற்கிடையே, மருத்துவ கல்வி இயக்குனரகம், நேற்று வெளியிட்ட அறிக்கையில்,
mbbsbds 20191gmail.com
என்ற, இ - மெயில் முகவரியில், ஆவணங்களை சமர்ப்பிக்கலாம் என, தெரிவித்து உள்ளது.


இதுகுறித்து, மருத்துவ மாணவர் சேர்க்கை குழு செயலர், செல்வராஜன் கூறியதாவது:ஆன்லைனில் குறிப்பிட்டுள்ள ஆவணங்களை, பலர் சமர்ப்பிக்கவில்லை

குறிப்பாக, ஆதிதிராவிடர் என, ஜாதி குறிப்பிட்டுள்ளவர்கள், அதற்கான சான்றிதழை சமர்ப்பிக்கவில்லை.


இதுபோல, 2,000க்கும் மேற்பட்டோர் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காததால், இ - மெயிலில் அனுப்ப கோரிஉள்ளோம்.


இந்த சான்றிதழ்கள், மாணவர்கள் தெரிவித்துள்ள தகவலின், உண்மை தன்மையை அறியவே கேட்கப்படுகின்றன.


ஓரிரு நாட்களில், தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment