ஜூலை 8 முதல் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு: புதிய நிபந்தனைகளால் 30 சதவீத மனுக்கள் சரிவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, July 2, 2019

ஜூலை 8 முதல் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு: புதிய நிபந்தனைகளால் 30 சதவீத மனுக்கள் சரிவு

ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு வரும் 8-ஆம் தேதி தொடங்குகிறது.


புதிய நிபந்தனைகளால் ஆசிரியர்கள் இடமாறுதல் கோரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை 30 சதவீதத்துக்கு மேல் குறைந்துள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு தொடர்பான கலந்தாய்வு நடத்தப்பட்டு உத்தரவு வழங்கப்படுகிறது.



அரசுப் பள்ளிகளில் பெரும்பாலும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரிய, ஆசிரியைகள் பலர் நீண்ட காலமாக வட மாவட்ட பள்ளிகளில் பணிபுரிகின்றனர். இவர்கள் சொந்த மாவட்டத்துக்கு வருவதற்காக ஆண்டுதோறும் கலந்தாய்வில் பங்கேற்கின்றனர்

ஆனால், குறைந்தபட்ச நபர்களுக்கே மாறுதல் வாய்ப்பு கிடைக்கிறது. இதனால், 15 ஆண்டுகள் வரை தென் மாவட்ட ஆசிரியைகள் பலர், வட மாவட்டங்களில் பணிபுரியும் நிலை தொடர்கிறது.



ஒரு பள்ளியில் குறைந்தது ஓர் ஆண்டு பணி செய்தவர்கள் இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்ற நிலை, இந்த கல்வியாண்டு முதல், குறைந்தது 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றியவர்கள் மட்டுமே இடமாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம் என மாற்றப்பட்டது. இது இடமாறுதலை எதிர்பார்க்கும் ஆசிரியர்களுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.



மேலும், ஒவ்வொரு பணித்தொகுப்பிலும் 100 இடங்களுக்கு மேல் காலி ஏற்பட்டால் மட்டுமே பொதுக் கலந்தாய்வு நடத்தப்படும், நிர்வாக காரணங்களுக்காக, தகுதி வாய்ந்த அலுவலர்களால் ஆசிரியர்களுக்கு நிர்வாக மாறுதல் உத்தரவு எந்த நேரத்திலும் வழங்கப்படலாம் என்பது போன்ற புதிய நியதிகளும் வகுக்கப்பட்டன.


இந்தப் புதிய நியதிகள், பல ஆசிரியர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. எனவே விண்ணப்பிப்பதில் ஆசிரியர்கள் ஆர்வம் காட்டவில்லை.


இதனால் கடந்த ஜூன் 21-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதிவரை கல்வித் துறை முதன்மைக் கல்வி அலுவலகங்களில் விண்ணப்பிப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் பெறுவது கடந்த 28-ஆம் தேதியுடன் முடிந்தது.


பல மாவட்டங்களில் வழக்கமாக விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் எண்ணிக்கையை விட 30 சதவீதத்துக்கும் குறைவானவர்களே விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து வருகிற 8-ஆம் தேதி ஆன்லைனில் கலந்தாய்வு தொடங்குகிறது.

முதல் நாளில், வட்டார கல்வி அலுவலர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு மாவட்டத்திற்குள் நடக்கிறது. 15-ஆம் தேதி கலந்தாய்வு நிறைவு பெறுகிறது.

No comments:

Post a Comment