ராணுவ ஆள் சேர்ப்பு முகாம்: 8 முதல் விண்ணப்பம் பதிவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, July 7, 2019

ராணுவ ஆள் சேர்ப்பு முகாம்: 8 முதல் விண்ணப்பம் பதிவு

ராணுவ வீரர்களுக்கான ஆள் சேர்ப்பு முகாம், ஈரோடு வ.உ.சி., மைதானத்தில் ஆக., 22 முதல், செப்., 2 வரை நடக்கவுள்ளது.


இதற்கான முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில்  நடந்தது.இதில் கலெக்டர் கதிரவன் பேசியதாவது


: ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் ஈரோடு, நாமக்கல், கோவை, சேலம், தர்மபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, மதுரை, தேனி, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட, 11 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர்.


 சோல்ஜர் டெக்னிக்கல், சோல்ஜர் அம்யூனிசன்ஸ், ஏவியேசன், சோல்ஜர் நர்சிங் அசிஸ்டன்ட், சோல்ஜர் ஜெனரல், சோல்ஜர் கிளர்க், ஸ்டோர் கீப்பர், சோல்ஜர் டிரேட்ஸ்மேன் உள்ளிட்ட பிரிவுகளுக்கு ஆள் சேர்ப்பு நடக்க உள்ளது.விருப்பம் உள்ளவர்கள், www.joinindianarmy.nic.in என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.


 எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தேர்ச்சி பெற்ற, பதினேழரை வயது முதல், 23 வயதுக்கு உட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப பதிவு, 8 ல் துவங்க உள்ளது. கடைசி நாள், ஆக.,7 ஆகும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.

No comments:

Post a Comment