கடனில் சிக்கித் தவிக்கும் அனில் அம்பானி, தனது நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை விற்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ முடிவு செய்துள்ளார்.
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைமை அலுவலகமானது மும்பையின் சாண்டாக்ரூஸ் பகுதியில் அமைந்துள்ளது. இந்த அலுவலகமானது 7 லட்சம் சதுர அடி பரப்பில் கட்டப்பட்டதாகும். இந்த அலுவலகத்தைத் தான் தற்போது அனில் அம்பானி விற்க முடிவு செய்துள்ளார்
விற்க முடியாத பட்சத்தில் குத்தகைக்கு விடவும் அவர் திட்டமிட்டுள்ளார். தனது நிறுவனங்களின் நட்டத்தால் உண்டான கடன் சுமையை குறைக்கும் பொருட்டு இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.
தலைமை அலுவலகமானது ஆயிரத்து 500 முதல் இரண்டாயிரம் கோடி ரூபாய் வரை விற்பனையாகக் கூடும் என்று கூறப்படுகிறது. ஆனால் ரிலையன்ஸ் குழுமமானது, 3 ஆயிரம் கோடி ரூபாய் வரை ஈட்ட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுதொடர்பாக அமெரிக்காவின் பிளாக்ஸ்டோன் உள்ளிட்ட சில நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக தலைமை அலுவலகத்தை தெற்கு மும்பையில் உள்ள பல்லார்ட் எஸ்டேட்டுக்கு மாற்றி விடவும் அனில் அம்பானி திட்டமிட்டுள்ளார்.

No comments:
Post a Comment