உலகக்கோப்பை போட்டியின் போது சச்சினை சந்தித்த சுந்தர் பிச்சை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 1, 2019

உலகக்கோப்பை போட்டியின் போது சச்சினை சந்தித்த சுந்தர் பிச்சை


இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டியின் போது சச்சினை கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இங்கிலாந்தின் பர்மிங்காம் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை காண கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை சென்றிருந்தார்.

அப்போது போட்டி வர்ணனையாளராக இருந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சினை, சுந்தர் பிச்சை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்த புகைப்படத்தை பிசிசிஐ தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளது.

No comments:

Post a Comment